தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி வசூல் என்பது கைகூடாமல் இருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டு என்னென்ன தமிழ் படங்கள் அந்த மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு ஏமாற்றமான ஆண்டாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலான தமிழ் படங்கள் ரிலீஸ் ஆன ஆண்டும் இதுதான். கிட்டத்தட்ட 300 படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வந்துள்ளன. இதில் ஒரு படம் கூட ஆயிரம் கோடி வசூல் சாதனையை எட்டிப்பிடிக்கவில்லை. இந்த ஆண்டு அதிகபட்சமாக கூலி படம் 514 கோடி வசூலித்து இருந்தது. இதனால் இந்த ஆண்டும் ஆயிரம் கோடி வசூல் கனவு நனவாகவில்லை. இதன்காரணமாக அனைவரின் கவனமும் 2026-ம் ஆண்டு நோக்கி நகர்ந்துள்ளது. அதில் ஆயிரம் கோடி வசூல் கனவுடன் காத்திருக்கும் படங்களை பற்றி பார்க்கலாம்.
26
ஜனநாயகன்
2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஆரம்பமே அட்டகாசமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2026-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது. ஏனெனில் இப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படம். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் விஜய் உடன் நடித்துள்ளதால், பான் இந்தியா அளவில் வசூல் வேட்டையாட காத்திருக்கிறது ஜனநாயகன். பொங்கலுக்கு சுமார் 10 நாள் தொடர் விடுமுறை ரிலீஸ் ஆவதால் இப்படம் 1000 கோடியை தட்டித்தூக்க வாய்ப்பு உள்ளது.
36
சூர்யா 46
2026-ம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவர உள்ளது. அதில் ஒன்று கருப்பு. அப்படம் ஜனவரியில் திரைக்கு வருகிறது. மற்றொரு படம் சூர்யா 46. இப்படத்தை லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இது பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது. இதில் ரவீனா டண்டன், ராதிகா சரத்குமார் போன்ற அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இது 2026-ம் ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படமும் பான் இந்தியா ஆடியன்ஸை டார்கெட் செய்து எடுக்கப்படுவதால், ஒருவேளை கிளிக் ஆனால் ஆயிரம் கோடி வசூல் அள்ள வாய்ப்பு உள்ளது.
2026-ல் ஆயிரம் கோடி வசூல் கனவில் உள்ள மற்றொரு தமிழ் படம் ஜெயிலர் 2. இதில் 2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் ஷாருக்கானும் கேமியோ ரோலில் நடிப்பதால், இதற்கு பாலிவுட்டிலும் மவுசு அதிகரித்துள்ளது. இதனால் இப்படம் அசால்டாக ஆயிரம் கோடி வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
56
கமலின் KH 237
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியை சந்தித்ததால், அவர் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவரின் அடுத்த படமான KH237-ஐ அன்பறிவு இயக்க உள்ளார்கள். இப்படம் கமல்ஹாசன் மேற்பார்வையில் தயாராகிறது. இப்படம் அதிரடி ஆக்ஷன் கதையம்சத்தில் தயார் ஆவதால், அப்படத்திற்கு பான் இந்தியா அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரின் கம்பேக் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் இது ஆயிரம் கோடி வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது.
66
அஜித்தின் AK 64
குட் பேட் அக்லி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் ஏகே 64. ஆதிக் ரவிச்சந்திரன் தான் இப்படத்தை இயக்க உள்ளார். ஹார்பர் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் படமாக இது தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாம். இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதால், இதுவும் ஆயிரம் கோடி வசூலிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.