Super Star Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட திரைப்படம் ஜெயிலர். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில், தற்போது 'ஜெயிலர் 2' படம் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
Anirudh Ravichander film music directer hikes remuneration
அந்த வகையில், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து, 2023ல் திரைக்கு வந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்திருந்தார். சிறப்பு தோற்றத்தில் மோகன் லால், ஷிவராஜ் குமார், கிஷோர், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்திருந்தனர். ரூ.220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரூ.650 கோடி வரை வசூல் சாதனை செய்தது.
SK 25 படத்திற்கு சிவாஜி கணேசனின் சூப்பர் ஹிட் பட டைட்டில்! ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியான அப்டேட்!
Rajinikanth and anirudh
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். குறிப்பாக இந்த படத்தில், தமன்னாவின் 'காவலா' பாடல் ரசிகர்களையே துள்ளி குதித்து ஆட்டம் போட வைத்தது. யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலில் ஒன்றாகவும் இந்த பாடல் மாறியது. தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாக உள்ளது. இதற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அதில், ஜெயிலர் 2 புரோமோ வீடியோ வெளியானது. இந்த வீடியோ ஜெயிலர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Jailer 2 Movie
இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், கதைக்கு ஏற்ப அவர்கள் மாற்றப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஜெயிலர் படத்தில் நடித்த ஷிவராஜ் குமாருக்குப் பதிலாக பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
திருமணமான இரண்டே வருடத்தில் விவாகரத்தை அறிவித்த - விஜய் பட நடிகை!
Rock Star Anirudh
இதற்கு காரணம் ஷிவராஜ் குமார் கேன்சர் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தான் ஜெயிலர் 2 படத்துக்கு அனிருத் வாங்கிய சம்பளம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஜெயிலர் 2 படத்துக்கு அனிருத் ரூ.18 கோடி வரையில் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்திற்கு ரூ.10 கோடி வரையில் அனிருத் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. இப்போது அதைவிட அதிகமாகவே பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும், இந்தப் படத்தின் மியூசிக் ரைட்ஸ் மட்டும் ரூ.25 கோடி வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அனிருத்திற்கு ரூ.18 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.