பிக்பாஸ் லாஸ்லியாவின் அடுத்த அதிரடி..இந்த முறை ஜெய்பீம் கூட்டணியில்...

Kanmani P   | Asianet News
Published : Apr 08, 2022, 02:58 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது நாயகியாக தரம்  உயர்ந்துள்ளார். இந்நிலையில் ஜெய்பீம் பட நாயகியுடன் லாஸ்லியா புது படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்.

PREV
18
பிக்பாஸ் லாஸ்லியாவின் அடுத்த அதிரடி..இந்த முறை ஜெய்பீம் கூட்டணியில்...
LOSLIYA

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமான லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். மாடலாகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் லாஸ்லியா தற்போது நாயகியாக உயர்ந்துள்ளார்.

28
LOSLIYA

கொஞ்சும் இலங்கை தமிழில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த லாஸ்லியா..பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது கவினை காதலிப்பதாக பேசப்பட்டது. பின்னர் இருவரும் வெளியில் வந்த பிறகு பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

38
BiggBoss Losliya

பின்னர் லாஸ்லியாவிற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பாஜன் சிங் உடன் லாஸ்லியா நடித்திருந்தார்.

48
LOSLIYA

இதையடுத்து மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான கூகுள் குட்டப்பன்’ படத்தில் பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிகுமார்,  பிக்பாஸ் புகழ் தர்ஷன் உடன் நடித்துள்ளார்.

58
LOSLIYA

தற்போது  'ஜெய்பீம்’ பட நடிகை லிஜோமோல் ஜோஸ் உடன் பிக்பாஸ் லாஸ்லியா இணைந்து ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

68
LOSLIYA

அன்னபூரணி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லியோனால் ஜோஸ்வா என்பவர் இயக்கயிருக்கிறார். இந்த படத்திற்கு ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளார்.

78
LOSLIYA

இவர்களோடு ஜெய்பீம் ஹரிகிருஷ்ணன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். லியோனால் ஜோஸ்வா இந்த படத்தில் பூரணி என்ற ஹவுஸ்வைஃப் வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

88
LOSLIYA

லாஸ்லியா, ‘அன்னா’ என்ற பணக்கார பெண் கேரக்டரில் நடிக்கவுள்ள இந்த படத்தின் துவக்கம் பூஜை  உடன் இன்று துவங்கியுள்ளது.

click me!

Recommended Stories