சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்த இசைஞானி இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது இசை உரிம ஒப்பந்தங்கள், பதிப்புரிமை சட்டத்தின் சிக்கலான தன்மைகளை விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இளையராஜா தனது சொந்தப் பாடல்களையே பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள செய்தி, இசை உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்தச் சிக்கலின் பின்னணி மற்றும் நீதிமன்ற உத்தரவின் விபரங்களை இங்கே காண்போம்.
24
வழக்கின் பின்னணி: என்ன நடந்தது?
இசைஞானி இளையராஜா 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் பல நிறுவனங்களுக்குத் தனது இசை உரிமத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருந்தார். இதில் ‘சரிகம’ நிறுவனம், குறிப்பிட்ட 134 படங்களின் பாடல்களுக்கான முழுமையான மற்றும் பிரத்யேக உரிமம் தங்களிடம் இருப்பதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த 134 படங்களின் பாடல்களை இளையராஜா மற்ற இசை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு விற்பனை செய்தது ஒப்பந்த மீறல் என்பது சரிகம நிறுவனத்தின் வாதம்.
34
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அந்த குறிப்பிட்ட 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.பொதுவாக இசை உரிம ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முடிவுக்கு வரும். ஆனால், சில ஒப்பந்தங்கள் "நிரந்தர உரிமை" அடிப்படையில் கையெழுத்தாகியிருக்கலாம் என்பதே இங்குள்ள சட்டச் சிக்கல்."தன் பிள்ளையைத் தானே கொஞ்சுவதற்குத் தடையா?" என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.
80 வயதைக் கடந்தும் இன்றும் துடிப்புடன் இசையமைத்து வரும் இளையராஜா, பாடல்களின் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ உரிமை அதன் படைப்பாளருக்கே சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். எக்கோ, பிரசாத் லேப் என ஏற்கனவே பல சட்டப் போராட்டங்களை அவர் சந்தித்துள்ளார். இந்தத் தடை ஒரு தற்காலிக உத்தரவு மட்டுமே என்றாலும், பதிப்புரிமை சட்டத்தின் சிக்கலான பக்கங்களை இது வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.