இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டு கால சினிமா பயண விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். காக்க காக்க திரைப்படம் தனது அடையாளத்தை மாற்றியதாக கூறிய சூர்யா, கௌதம் மேனன் போன்ற இயக்குநர்களே சினிமாவுக்கான பிரம்மாக்கள் என குறிப்பிட்டார்.
தமிழ் திரையுலகில் ஸ்டைலிஷ் மேக்கராக வலம் வரும் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குநராக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், நடிகர் சூர்யா கலந்துகொண்டு கௌதம் மேனன் குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
25
மேடையை அதிரவைத்த 'அஞ்சல' டான்ஸ்!
விழாவின் தொடக்கத்திலேயே சூர்யா ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வாரணம் ஆயிரம்' படத்தில் இடம்பெற்ற எனர்ஜியான "அஞ்சல" பாடலுக்கு, மேடையிலேயே கௌதம் மேனனுடன் இணைந்து சூர்யா நடனமாடினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த ஹிட் கூட்டணியை ஒன்றாகப் பார்த்த ரசிகர்கள், ஆரவாரத்தால் அரங்கையே அதிர வைத்தனர்.
35
"இவர்கள் தான் சினிமாவுக்கான பிரம்மாக்கள்"
மேடையில் பேசிய சூர்யா, இயக்குநர்களின் முக்கியத்துவத்தைப் பற்றி மிகவும் உருக்கமாகப் பேசினார். "இவர்கள் (கௌதம் மேனன் போன்ற இயக்குநர்கள்) தான் சினிமாவுக்கான பிரம்மாக்கள். அவர்கள் கற்பனை செய்யவில்லை என்றால், எங்களைப் போன்ற நடிகர்களுக்கு இங்கே இடமே இல்லை. ஒரு நடிகனாக என்னைச் செதுக்கியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு," எனப் புகழாரம் சூட்டினார்.
சூர்யாவின் திரைப்பயணத்தில் 'காக்க காக்க' திரைப்படம் ஒரு மைல்கல் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதை வழிமொழிந்த சூர்யா, "இன்று எனக்குக் கிடைக்கும் அன்பிற்கும், சமூகத்தில் நான் பெறும் மரியாதைக்கும் 'காக்க காக்க' திரைப்படம் ஒரு மிக முக்கியமான காரணம். அன்புச்செல்வன் என்ற கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்து, என் அடையாளத்தையே மாற்றியவர் கௌதம்," என்று நெகிழ்ந்தார்.
55
25 ஆண்டுகால நட்பு மற்றும் நன்றி
சூர்யாவுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையிலான நட்பு வெறும் சினிமாவுக்கானது மட்டுமல்ல என்பதை அந்த விழா உறுதிப்படுத்தியது. "உங்கள் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கும், இத்தனை கால பயணம் மற்றும் அன்புக்கும் நன்றி" எனத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, இப்போதும் தனக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்குத் தலை வணங்குவதாகவும் கூறி உரையை முடித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.