விஜயின் பெற்றோர்கள் ஆசியுடன் நடைபெற்ற ஹரிஷ் கல்யாணின் திருமண வரவேற்பு

Published : Oct 30, 2022, 03:50 PM IST

ஹரிஷ் கல்யாணின் ரிசப்ஷனில் கலந்து கொண்ட விஜயின் தாய் மற்றும் தந்தை, விஜய் ஆண்டனி உள்ளிட்டோருடன் பிக் பாஸ் பிரபலங்களின் புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது.

PREV
16
விஜயின் பெற்றோர்கள் ஆசியுடன் நடைபெற்ற ஹரிஷ் கல்யாணின் திருமண வரவேற்பு
harishkalyan

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உண்டு. அவர்களில் முக்கியமானவர் தான் ஹரிஷ் கல்யாண். பின்னர் தனது இடத்தை சரியாக தக்க வைத்துக் கொண்டவர் இவர். முன்னதாக சிந்து சமவெளி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். சுயாதீன கதையோடு உருவான இந்தப் படத்தை சாமி என்பவர் எழுதியிருந்தார். இதில் அமலாபால் முக்கிய வேடத்தில்  நடித்திருந்தார்.

26
harishkalyan

பின்னர் தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது. ஜெய் ஸ்ரீ ராம் என்னும் படத்தின் மூலம் அங்கு அறிமுகமானார். பின்னர் பொறியாளன், வில்லு உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு பிக் பாஸ் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவிகள் முதன்முதலாக ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 வைல்ட்கார்டு போட்டியாளராக உள்ள நுழைந்தார். பிக் பாஸ் வீட்டில் 52 வது நாளில் உள்நுழைந்த இவர் சுமார் 98 நாட்கள் தாக்கு பிடித்த இரண்டாவது ரன்னரப்பாக வந்து மாஸ் காட்டி இருந்தார்.

36
harishkalyan

மக்களின் மனம் கவர்ந்த இவர் பிக்பாஸுக்கு பிறகு பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் நடித்தார். யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ரைசா வில்சன் நாயகியாக நடித்திருந்தார்.

46
harishkalyan

இதை தொடர்ந்து அடல்ட் கதை சார்ந்த தனுசு ராசி நேயர்களே, தாரக பிரபு, ஓ மண பெண்ணே என இவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த படங்கள் இவருக்கு சாக்லேட் பாய் என்கிற பெயரை பெற்று கொடுத்தது. ரசிகர்களை விட ரசிகைகளின் ஆதரவு தான்.தற்போது 100 கோடி வானவில், நட்சத்திரம், டீசல் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து முடித்துள்ளார்.

56
harishkalyan

சமீபத்தில் தனது பியான்சி என ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தினார் ஹரிஷ் கல்யாண். இந்த செய்தியை கேட்டு ரசிகைகளின் மனங்கள் உடைந்து போகின என்றே சொல்லலாம். இதையடுத்து ஹரிஷ் கல்யாணிக்கும் நர்மதா உதயகுமாருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

66
harishkalyan

இவர்களது திருமண போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாயின. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர்களது திருமணம் பிரபலங்கள் சூழ நடைபெற்றது. மணமக்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதை அடுத்து இவர்களது திருமண புகைப்படங்களும் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்களும் வைரலாக துவங்கின. இந்நிலையில் ஹரிஷ் கல்யாணின் ரிசப்ஷனில் கலந்து கொண்ட விஜயின் தாய் மற்றும் தந்தை, விஜய் ஆண்டனி உள்ளிட்டோருடன் பிக் பாஸ் பிரபலங்களின் புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது.

click me!

Recommended Stories