768 நாட்கள் ஓடி சாதனை; 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே தமிழ் படம்: தமிழ் சினிமாவையே மிரள வைத்த படம் ஹரிதாஸ்!

Published : Feb 12, 2026, 08:01 PM IST

Haridas First Tamil Movie 768 Days Record : ஒரு தீபாவளி என்றில்லாமல், மூன்று தீபாவளி வரை கிட்டத்தட்ட 768 நாட்கள் ஓடி வசூல் வேட்டை நடத்திய ஒரு படத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Haridas Movie 768 Days Record

தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு மாதம் இல்ல இல்ல ஒரு வாரம் ஓடுவதே சிக்கலாக இருக்கும் நிலையில் ஒரு படம் ஒரேயொரு படம் 3 தீபாவளி கடந்து கிட்டத்தட்ட 768 நாட்கள் ஓடி வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை. நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும். ஆனால், அந்த படம் அஜித் படமும் இல்லை, விஜய் படமும் இல்லை, இவ்வளவு ஏன் ரஜினி, கமல் ஹாசன், எம்ஜிஆர், சிவாஜி, ராமராஜன் என்று இவர்கள் யாருடைய படமும் இல்லை. அப்போது யாருடைய படம் என்று நீங்கள் கேட்கிறீர்களா? அது தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ். இயக்குநர் சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கிய இந்தப் படம் கடந்த 1944ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி வெளியான படம்.

24
First Tamil Movie to run 3 years

ஹரிதாஸ் படத்தில் தியாகராஜ பாகவதர் உடன் இணைந்து என் எஸ் கிருஷ்ணன், பிவி ரங்காச்சாரி, டி ஆர் ராஜகுமாரி, என் சி வசந்தகோகிலம், டி ஏ மதுரம், ராதாபாய் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஹரிதாஸ் (தியாகராஜ பாகவதர்) அப்பா, அம்மாவை விட மனைவி சொல்லே மந்திரம் என்று மயங்கி கிடப்பவன்.

34
M.K. Thyagaraja Bhagavathar Haridas Movie

ஒரு கட்டத்தில் நடன மங்கையின் நடனம் மற்றும் அழகில் மயங்கி அவரே கதி என்று இருக்கும் நிலைக்கு வருகிறார். இதைப் பற்றி அறிந்த ஹரிதாஸின் மனைவி நடன மங்கையை வீட்டை விட்டு துரத்த, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அந்த நடன மங்கை ஹரிதாஸின் மனைவியை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்துகிறார். ஆனால், இதையெல்லாம் செய்தது ஹரிதாஸின் அப்பா, அம்மா என்று அவரை நம்ப வைக்க அவரும் அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு துரத்திவிடுகிறார்.

44
Haridas Movie, Haridas Movie Collection Records, ஹரிதாஸ் திரைப்படம் சாதனை

பின்னர் நடன மங்கைக்கு தனது வீட்டை எழுதி வைக்க, ஹரிதாஸும், அவரது மனைவியும் வீட்டை விட்டு துரத்தப்படுகின்றனர். காலப்போக்கில் தெய்வத்தின் அருளால் எல்லா உண்மைகளும் அறிந்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து அம்மா, அப்பாவை சந்தித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்.

இப்படிப்பட்ட அருமையான கதையம்சத்தில் வெளியான இந்தப் படம் தான் கிட்டத்தட்ட 3 தீபாவளிகளை கடந்து 768 நாட்கள் ஓடி அதிக வசூல் குவித்த சாதனை படமாக தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து கொடுத்தது. கடந்த 1944ஆம் ஆண்டு சென்னையின் பிராட்வே திரையரங்கில் ஹரிதாஸ் படம் வெளியாகி சாதனை படைத்தது. இன்று வரை இந்தப் படத்தின் வசூல் சாதனையை எந்தப் படமும் முறியடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. படமும், எத்தனை கோடி வசூல் குவித்தது என்பதற்கான தகவலும் இல்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories