கவினின் அம்மா ஏக்கம் தீருமா? விஜி - விக்ரம் சந்திப்பில் நடந்த மாற்றம்! செல்லமே செல்லமே இன்றைய மெகா எபிசோட்

Published : Feb 12, 2026, 07:01 PM IST

Chellame Chellame Serial Viji and Vikram Meeting : விஜி மற்றும் விக்ரம் இருவரும் கோயிலில் சந்தித்துக் கொண்ட நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை செல்லமே செல்லமே சீரியலின் இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

PREV
13
Chellame Chellame Serial Today Episode

சன் டிவியில் இரவு 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் செல்லமே செல்லமே சீரியல் தற்போது பரபரப்பான உண்மை சம்பவ காட்சிகள் வெளிவர தொடங்கியுள்ளது. நிலா தன் பாட்டியிடம் ஏன் பாட்டி இப்படி அத்தை மாமா எல்லாரும் எங்க அம்மாவை எப்படி திட்டுறாங்க எங்க அம்மா எவ்வளவு நல்லா அம்மான் உங்களுக்கு தெரியாதா பாட்டி என்றெல்லாம் தன் அம்மாவை புகழ்ந்து பாட்டியிடம் பேச மனம் உருகி போறார் பாட்டி. பாட்டி எங்க அப்பா எங்க இருக்காரு? எங்க அப்பாவ நீங்க பார்த்து இருக்கீங்களா பாட்டி என்று தன் அப்பாவை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் நிலா. 

23
செல்லமே செல்லமே சீரியல் இன்றைய எபிசோட்

அப்பா இல்லை இன்னாதானா அத்தை மாமா எல்லாரும் இப்படி எங்க அம்மாவ திட்டுறாங்க எங்க அப்பா இருந்தார்னா இவங்களா திட்ட மாட்டாங்களா என்றெல்லாம் தன் அம்மாவுக்காக பரிந்து பேசுகிறார் நிலா. அதனைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார் விஜி‌. நிலா தன் அப்பா மீது அதிக பாசம் இருப்பது போல் காட்டுகிறார் அதனை கண்டு விஜி பயப்படுகிறார் எங்கு நம்ம பொண்ணு அப்பா வேண்டும் என்று கேட்கிறாள் போல என்று பயப்புகிறார். அதன் பிறகு மன கவலை தாங்காமல் விஜி ஒரு கோயிலுக்கு செல்கிறார் அங்கு விக்ரமும் வருகிறார் 

33
Chellame Chellame Serial Latest Twist

ஆனால் சிறிது நேரம் அவர்கள் அங்கு பார்த்துக் கொள்ளவில்லை ஒரு பெண்மணி கோயிலில் தனது நீண்ட நாள் வேண்டுதலான அடி பிரதோஷணம் செய்கிறார் அதாவது தரையில் படுத்து உருண்டு கொடுத்தல். அவரது சேலை விலகி விலகி வருகிறது அதனை கண்ட விஜி இவங்களுக்கு உதவு வேண்டும் எனும் மனதில் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் விழுப்புரத்திலிருந்து விக்ரம் வருகிறார். எதிரெதிரே வந்த விஜியும் விக்ரமும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றனர் வியப்புடன் பரபரப்புடன் நின்று கொண்டிருக்கிறனர் விஜி மற்றும் விக்ரம் வியப்புடன் இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது ப்ரோமோ முடிவடைகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories