இளையராஜாவால் தான் குட் பேட் அக்லி ஹிட் ஆனதா? பிரேம்ஜி கொடுத்த நச் பதில்

Published : Apr 23, 2025, 10:04 AM IST

அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ஹிட்டானதற்கு இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியது தான் காரணமா என்கிற கேள்விக்கு பிரேம்ஜி ஓப்பனாக பதிலளித்துள்ளார்.

PREV
14
இளையராஜாவால் தான் குட் பேட் அக்லி ஹிட் ஆனதா? பிரேம்ஜி கொடுத்த நச் பதில்

Is Ilayaraja the reason for the success of 'Good Bad Ugly'? Premji's answer! அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வந்த படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்கள் இப்படத்தை தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகிறார்கள்.

24
Ilaiyaraaja

Good Bad Ugly பட சர்ச்சை

குட் பேட் அக்லி திரையரங்குகளில் 250 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த சர்ச்சைகளும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அண்மையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இடம்பெற்ற தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி இசைஞானி இளையராஜா அப்படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால் தாங்கள் சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்களிடம் முறையாக அனுமதி வாங்கிவிட்டதாக குட் பேட் அக்லி படக்குழு அதற்கு விளக்கம் அளித்து இருந்தது.

இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி பட இயக்குனரை கைது செய்யக்கோரி வந்த புகாரால் பரபரப்பு - பின்னணி என்ன?

34
Gangai Amaran

Good Bad Ugly-யை சாடிய கங்கை அமரன்

குட் பேட் அக்லி படத்தில் பழைய பாடல்களை பயன்படுத்தியதற்கு இளையராஜாவிடம் அனுமதி பெறாததை அவரது சகோதரர் கங்கை அமரன் கடுமையாக விமர்சித்து இருந்தார். 7 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் இசையமைப்பாளரால் ஹிட் கொடுக்க முடியவில்லை என்றும், இளையராஜாவின் பாடலால் தான் அப்படம் ஹிட்டானதாகவும் அவர் பேசி இருந்தார். முறையாக அனுமதி பெற்று பயன்படுத்தி இருந்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை என கங்கை அமரன் பேசி இருந்தார்.

44
Premgi

Good Bad Ugly பற்றி பிரேம்ஜி சொன்னதென்ன?

இந்நிலையில், குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக கங்கை அமரன் பேசியது பற்றி அவரது மகன் பிரேம்ஜியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், என் அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவனுக்கு நான் சப்போர்ட் செய்து பேசுவேன். அதேபோல் அவர் அவரது அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி பேசி இருக்கிறார் என கூறினார்.

குட் பேட் அக்லி படம் ஹிட் ஆனதற்கு இளையராஜா பாடல்கள் தான் காரணம் என சொன்னதற்கு உங்கள் கருத்து என்ன என பிரேம்ஜியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், அதெல்லாம் கிடையாது, அப்படம் ஹிட்டானதற்கு தல அஜித் மட்டுமே காரணம் என கூறினார். அவர் பேசிய வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லியிடம் சரண்டர் ஆன சச்சின் - ரீ-ரிலீஸ் வசூல் இவ்வளவுதானா?

Read more Photos on
click me!

Recommended Stories