பிப்ரவரி 20ந் தேதி தியேட்டரில் புதுப்படங்களைக் காட்டிலும் ரீ-ரிலீஸ் படங்கள் தான் அதிகளவில் ரிலீஸ் ஆகின்றன. அதேபோல் ஓடிடியிலும் சில படங்கள் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. அதன் பட்டியலை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவுக்கு பிப்ரவரி மாதம் மந்தமாகவே சென்று கொண்டிருக்கிறது. இம்மாதம் முதல் வாரம் வெளியான வித் லவ் படம் மட்டும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதன்பின்னர் காதலர் தினத்தை ஒட்டி வெளியான புதுப்படங்களைக் காட்டிலும் அன்று ரீ ரிலீஸ் ஆன படங்கள் தான் வசூலை வாரிக் குவித்தன. அதே நிலை தான் இந்த வாரமும் தொடர இருக்கிறது. இந்த வாரமும் புதுப் படங்களை காட்டிலும் ரீ ரிலீஸ் படங்கள் தான் அதிகளவில் ரிலீஸ் ஆக உள்ளன. அதேபோல் ஓடிடியிலும் இந்த வாரம் சில படங்கள் ஸ்ட்ரீம் ஆக இருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
பிப்ரவரி 20-ல் ரீ-ரிலீஸ் ஆகும் படங்கள்
பிப்ரவரி 20ந் தேதி விஜய்யின் இரண்டு படங்கள் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஒன்று அட்லீ இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜய் நடித்த தெறி திரைப்படம், மற்றொன்று விஜய் நடித்து எவர்கிரீன் ஹிட் அடித்த கில்லி திரைப்படம். கில்லி படம் இதற்கு முன்னர் 2024-ம் ஆண்டு ரீ ரிலீஸ் ஆனபோது அதற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அதனால் திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாததால் கடும் மன உளைச்சலில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக இந்த ரீ ரிலீஸ் அமைய உள்ளது.
35
அஜித் படமும் ரீ ரிலீஸ் ஆகிறது
விஜய்க்கு போட்டியாக அஜித் நடித்த துணிவு படமும் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். அப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான் வெளியிடுகிறார். இந்த வாரம் ரீ-ரிலீஸில் தல தளபதி மோதல் இருப்பதால் திரையரங்குகள் நிரம்பி வழிய வாய்ப்பு உள்ளது. அதேபோல் இந்த ரீ-ரிலீஸ் போட்டியில் குதித்துள்ள மற்றொரு திரைப்படம் சூது கவ்வும். நலன் குமாரசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த இப்படம் ரீ-ரிலீஸில் எந்த அளவு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நட்ராஜ், செந்தில், இமான் அண்ணாச்சி நடிப்பில் உருவாகி உள்ள சிவ சம்போ திரைப்படம் பிப்ரவரி 20ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் பாவனா நடித்த அனோமி, ஜெயராமின் ஆசைகள் ஆயிரம் ஆகிய மலையாள படங்கள் டப் செய்யப்பட்டு இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. மேலும் லோக்கல் பாய்ஸ், அறிவான், லவ் சப்ஸ்கிரைப் ஷேர்ஸ், எம்ஜி 24, மை டியர் டோலி, செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் திரைக்கு வர உள்ளன.
55
ஓடிடி வெளியீடுகள்
ஓடிடியில் வருகிற பிப்ரவரி 20ந் தேதி ஜிவி பிரகாஷ் நடித்துள்ள லக்கி என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை உதய் மகேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தில் சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, டேனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுதவிர விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், அஸ்வின், ரக்ஷன் ஆகியோர் நடிப்பில் ரிலீஸ் ஆன ஹாட்ஸ்பாட் டூமச் திரைப்படம் இந்த வாரம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.