Gautham Karthik
பாரதிராஜாவால் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் கார்த்திக். அவர் தன்னுடைய முதல் படமான அலைகள் ஓய்வதில்லை மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதையடுத்து பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக வலம் வந்தார் கார்த்திக். நடிகர் கார்த்திக் கடந்த 1988-ம் ஆண்டு நடிகை ராகினியை திருமணம் செய்துகொண்டார். இருவரும் சினிமாவில் ஜோடியாக நடித்தபோது காதலித்து கரம்பிடித்தனர்.
gautham karthik
கார்த்திக் - ராகினி ஜோடிக்கு இரண்டு மகன்கள், அதில் மூத்த மகனான கவுதம் கார்த்திக் தற்போது சினிமாவில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் அறிமுகமாகி, அடுத்தடுத்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, தேவராட்டம், இவன் தந்திரன், ரங்கூன், 1948, பத்து தல என தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
gautham karthik
இந்நிலையில், நடிகர் கவுதம் கார்த்திக் பேட்டி ஒன்றில் தன் அம்மாவும், அப்பாவும் பிரிந்தது குறித்து மனம்திறந்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது : அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணியதால் அம்மாவும், அப்பாவும் பிரிஞ்சிட்டாங்க. இருவருமே பிரிந்த பிறகு நான் தான் தனிமையில் வாடினேன். அப்பா சென்னையில் இருந்ததால், நான் அம்மாவுடன் இருந்தான் இருந்தேன்.
வருஷத்துக்கு ரெண்டு தடவ மட்டும் அப்பாகிட்ட இருந்து போன் வரும், அதேபோல் எப்பயாச்சும் தான் பார்க்கவே வருவார். அந்த சமயத்தில் என்னை அருகில் இருந்து வளர்த்தது என் அம்மா தான். சிங்கிள் மதராக இருந்து இரண்டு பசங்களை வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும் அதையும் மீறி என்னையும், என் தம்பியையும் வளர்த்தார்கள். நான் தனிமையில் வாடிய போது என்னுடைய ஃபிரெண்ட்ஸ் தான் என்னுடனே இருந்தாங்க” என எமோஷனலாக பேசி உள்ளார் கவுதம் கார்த்திக்.
இதையும் படியுங்கள்... அப்பா - அம்மாவுக்கு 60-ஆம் கல்யாணம் செய்து அழகு பார்த்த விஜய் டிவி KPY பாலா! வைரலாகும் வீடியோ..!