Gangers Beat Good bad Ugly in Box Office : தமிழ் சினிமாவில் சக்சஸ்புல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. கடந்த ஓராண்டில் மட்டும் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அதில் முதலாவதாக ரிலீஸ் ஆன படம் அரண்மனை 4. இப்படம் கடந்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இதையடுத்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அவர் இயக்கிய மதகஜராஜா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதன்பின்னர் அவர் இயக்கிய கேங்கர்ஸ் திரைப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.
25
Gangers
ஹாட்ரிக் ஹிட் அடித்த சுந்தர் சி
ஏற்கனவே தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கொடுத்த சுந்தர் சி, கேங்கர்ஸ் படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கேங்கர்ஸ் திரைப்படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளார் சுந்தர் சி. அப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் கோலிவுட்டில் ஒரே ஆண்டில் மூன்று வெற்றிகளை ருசித்த இயக்குனர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் சுந்தர் சி.
கேங்கர்ஸ் திரைப்படத்தை இயக்கியதோடு அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் சுந்தர் சி. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் வாணி போஜன், கேத்தரின் தெரசா, முனீஸ்காந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். மணி ஹெய்ஸ்ட் பாணியிலான இப்படத்தை தன்னுடைய ஸ்டைலில் காமெடி கலந்து எடுத்து, ரசிகர்களுக்கு ஒரு நகைச்சுவை விருந்தாக இப்படத்தை கொடுத்திருக்கிறார் சுந்தர் சி.
45
Gangers movie Day 1 Box Office
கேங்கர்ஸ் முதல் நாள் வசூல்
வின்னர், தலைநகரம் என சுந்தர் சி படங்களில் வடிவேலுவின் காமெடி தனித்துவமாக இருக்கும். அப்படி கேங்கர்ஸ் படத்திலும் இவர்களின் காம்போ செமையாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதால் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். கேங்கர்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 316 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு நேற்று மட்டும் 1279 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதன்மூலம் முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் 1 கோடியே 16 லட்சத்து 81 ஆயிரத்து 800 ரூபாய் வசூலித்துள்ளது கேங்கர்ஸ் திரைப்படம்.
55
Gangers vs Good bad Ugly Box Office
வசூலில் குட் பேட் அக்லியை முந்திய கேங்கர்ஸ்
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வந்த நிலையில், அதற்கு போட்டியாக கேங்கர்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் குட் பேட் அக்லி படத்தைவிட அதிகம் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் ரூ.1 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் கேங்கர்ஸ் திரைப்படம் அதைவிட 16 லட்சம் கூடுதலாக வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது.