விஜய் முதல் துல்கர் சல்மான் வரை... பணக்கார வீட்டு பெண்களை மணமுடித்த டாப் நடிகர்களின் லிஸ்ட் இதோ

Published : Oct 03, 2022, 02:30 PM ISTUpdated : Oct 03, 2022, 02:31 PM IST

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்கள் சிலர் பணக்கார வீட்டு பெண்களை மணமுடித்துள்ளனர். அவர்கள் யார்... யார் என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
விஜய் முதல் துல்கர் சல்மான் வரை... பணக்கார வீட்டு பெண்களை மணமுடித்த டாப் நடிகர்களின் லிஸ்ட் இதோ

அல்லு அர்ஜுன்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், கடந்த 2011-ம் ஆண்டு சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது. சினேகா ரெட்டியின் பெற்றோர் கஞ்சாரியா ரெட்டி மற்றும் கவிதா ரெட்டி இருவரும் தொழிலதிபர்கள் ஆவர். இவர்கள் ஒரு கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.

26

ஜூனியர் என்.டி.ஆர்

புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவின் பேரனான ஜூனியர் என்.டி.ஆர். தற்போது டோலிவுட்டில் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். இவர் லட்சுமி பிரனதி என்கிற பெண்ணை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். லட்சுமியின் தந்தை தெலுங்கில் செய்தி சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதேபோல் லட்சுமியின் தாயார் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

36

ராம்சரண்

நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், கடந்த 2012-ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அப்பல்லோ பவுண்டேஷனை உபாசனா தான் நிர்வகித்து வருகிறார். இவரின் தந்தை KEI குரூப் என்கிற மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்... ‘பொன்னியின் செல்வன்' ஒருவாரத்துக்கு ஹவுஸ்புல்! தியேட்டர் கிடைக்காததால் சுந்தர் c படத்தை தள்ளிவைக்கும் உதயநிதி?

46

விஜய்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அவரது ரசிகையாக இருந்த சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம் தொழிலதிபர் என்பது பலரும் அறியாத ஒன்று. விஜய்யும் சங்கீதாவும் கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு சஞ்சய் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர்.

56

ராணா

நடிகர் ராணா டகுபதி, கடந்த 2020-ம் ஆண்டு மஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மஹீகா பஜாஜ் கட்டிட உள் வேலைப்பாடுகள் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தாயார் Krsala ஜுவல்லர்ஸ் என்கிற நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

66

துல்கர் சல்மான்

மலையாள நடிகர் மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான் கடந்த 2011-ம் ஆண்டு அமல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அமலின் தந்தை மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். துல்கர் - அமல் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இதையும் படியுங்கள்... என்ன இப்படி இறங்கிட்டாங்க..வயிற்றில் குழந்தையுடன் பாரதிக்காக விஷம் குடிக்கும் வெண்பா...திட்டி தீர்க்கும் பாரதி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories