
தமிழ் திரையுலகில் தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனராக மணிரத்னம் வலம் வருகிறார். தனது அசாத்தியமான சினிமா திறமை, உணர்ச்சிபூர்வமான கதை சொல்லல், பல நட்சத்திரக் கலைஞர்களை ஒருங்கிணைக்கும் தன்மைக்காக அவர் அறியப்படுகிறார். அவரது பல படங்கள் இந்திய சினிமாவின் அடையாளங்களாக மாறி உள்ளன. வரவிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படமும் அந்த பாரம்பரியத்தை தொடர உள்ள நிலையில், மணிரத்னம் இயக்கிய, காலத்தால் அழியாத ஆறு படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தாண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் தான் ’தக் லைஃப்’. சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு கமலஹாசனுடன் மணிரத்னம் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். சிம்பு, அபிராமி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 மற்றும் 2 எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பாகும். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் என மிகப்பெரிய நடிகர்கள் குழுவே நடித்திருந்தனர். சோழர் குல வம்சத்தில் அரியணையை கைப்பற்ற நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் பற்றிய கதையாகும்.
தனது தந்தையின் சாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்த போட்டியிடும் மூன்று சகோதரர்கள் பற்றிய கதையாக இந்த படம் அமைந்துள்ளது. சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதிராவ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஒரு குடும்பத்தில் நடக்கும் மோதலை, அதிரடியான காட்சிகளுடன் மணிரத்னம் வடிவமைத்து இருந்தார்.
சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் ஆயுத எழுத்து. மூன்று இளைஞர்களின் வாழ்க்கையை பின்னிப் பிணைக்கும் ஒரு அரசியல் திரில்லர் திரைப்படம். இளைஞர்களின் சித்தாந்தங்கள், செயல்பாடுகள் உள்ளிட்ட கருப்பொருளை இந்த படம் அலசி ஆராய்ந்து இருந்தது. இந்த படத்தில் மீரா ஜாஸ்மின், திரிஷா, ஈஷா தியோல் போன்றோர் நடித்திருந்தனர்.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களான கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதில் ஐஸ்வர்யா ராய் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழ்நாட்டின் சினிமா மற்றும் அரசியலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது . இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், மோகன்லால், ரேவதி, கௌதமி, தபு மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
மகாபாரதத்தில் கர்ணன் மற்றும் துரியோதனன் நட்பை விளக்கும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்த், மம்முட்டி, ஸ்ரீவித்யா, ஷோபனா, அரவிந்த் சாமி, ஜெய்ஷங்கர், பானுப்பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இளையராஜாவின் உணர்ச்சிமிக்க பின்னணி இசையுடன், பாடல்கள், கதை, ஆழமான உணர்ச்சி மற்றும் நடிப்புக்காக இந்த படம் பாராட்டப்பட்டது.