சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர், தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அவர் சட்டவிரோதமாக வெளிநாட்டு கிளிகளை வளர்த்து வருவதாக அறிந்த வனத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டு அந்த கிளிகளை பறிமுதல் செய்தனர். அந்த சமயத்தில் ரோபோ சங்கரும், அவரது குடும்பத்தினரும் வெளிநாட்டில் இருந்ததால், அவர்கள் இந்தியா திரும்பியதும் விசாரணை நடத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.