Tamil Movies : தமிழில் பல்பு வாங்கும் தெலுங்கு இயக்குனர்கள்.. ஒர்க் அவுட் ஆகாத தெலுங்கு - தமிழ் கூட்டணி படங்கள்

Published : Jun 24, 2025, 08:07 AM IST

தெலுங்கில் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றிய தமிழ் ஹீரோக்களின் படங்கள் மிகப்பெரிய வரவேற்பதை பெறுவதில்லை. அத்தகைய படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
17
Tamil Hero Movies With Telugu Directors

சமீப காலமாக தமிழ் திரையுலகம் மிகப் பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது. தமிழ் மொழியில் உருவாகும் படங்களுக்கு பிற மொழிகளில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக தமிழ் ஹீரோக்களை பிற மொழி இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர் ஆனால் தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் பலர், தெலுங்கு படங்களில் நடித்த பின்னர் பெரும் பின்னடைவை சந்திக்கின்றனர். தமிழில் சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கும் நடிகர்கள் தெலுங்கில் நடிக்கும் பொழுது மிக மோசமான தோல்வியை தழுவுகின்றனர். அப்படி தெலுங்கில் மிகப்பெரும் அடி வாங்கிய 5 தமிழ் ஹீரோக்களின் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
தோழா

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கிய திரைப்படம் ‘தோழா’. இந்தப் படத்தில் கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் 2011 ஆம் ஆண்டு பிரெஞ்சில் வெளியான ‘தி இன்டச்சபில்’ என்கிற படத்தின் மறு உருவாக்கமாகும். கழுத்துக்கு கீழ் உடல் அசைவற்ற நிலையில் சக்கர நாற்காலியில் முடங்கி கிடக்கும் கோடீஸ்வரருக்கும் (நாகார்ஜூனா) அவரது புதிய பராமரிப்பாளராக சேரும் கார்த்திக்கும் இடையே நடக்கும் நட்பை சுற்றி படம் நகர்கிறது. பணத்தை விட நட்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் சிறந்த படைப்பாக ‘தோழா’ வெளியானது. நேர்மறை சிந்தனைகளை தூண்டும் ஒரு ஃபீல் குட் படமாக இந்த படம் விளங்கியது. தெலுங்கில் இந்த படம் ஹிட் ஆனாலும், தமிழில் மிக சொற்ப வசூல் மட்டுமே கொடுத்தது.

37
பிரின்ஸ்

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான ஒரு நகைச்சுவை காதல் படம் தான் பிரின்ஸ். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த அன்பு (சிவகார்த்திகேயன்) என்கிற சமூக அறிவியல் ஆசிரியருக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெசிக்கா என்கிற ஆங்கில ஆசிரியருக்கும் இடையே மலரும் காதலைப் பற்றிய படமாகும். தேசபக்தி கொண்ட அன்புவின் தந்தை, மகன் பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பதை கடுமையாக எதிர்க்கிறார். இந்த எதிர்ப்புகளை மீறி இவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. கலவையான விமர்சனங்களே கிடைத்தது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.40 கோடி மட்டுமே வசூலித்து விமர்சன ரீதியாகவும் தோல்வியடைந்தது.

47
வாரிசு

இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தான் ‘வாரிசு’. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும் தமிழில் மிகப்பெரும் தோல்வியைத் தழுவியது. புகழ்பெற்ற தொழிலதிபர் மற்றும் அவரது மூன்று மகன்களை சுற்றி நடக்கும் திரைப்படமாகும். சகோதரர்களுக்கிடையே உள்ள மனக்கசப்புகள், குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், தொழில் போட்டி ஆகியவற்றை கடந்து தனது தந்தையின் தொழிலை விஜய் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. படத்தின் திரைக்கதை சில இடங்களில் மெதுவாக நகர்வதாகவும், படம் நாடகம் போல் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. தமிழில் விஜய் படம் பெறும் வசூலை விட குறைந்த வசூலையே இந்தப் படம் பெற்றது.

57
வாத்தி

இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘வாத்தி’. இது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவானது. கல்வி வணிகமயமாக்கப்படுவது மற்றும் அரசு பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து இந்த படம் விளக்குகிறது. அரசுப் பள்ளிக்கு ஆசிரியராக நியமிக்கப்படும் தனுஷ் அங்கு பல சவால்களை எதிர்கொள்கிறார். வசதியற்ற மாணவர்கள், அடிப்படை வசதி இல்லாத பள்ளிகள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத பெற்றோர்கள் என பல பிரச்சனைகளை சந்திக்கிறார். இருப்பினும் தன்னுடைய விடாமுயற்சியால் கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தி அவர்களை படிக்க வைக்கிறார். இந்தப்படம் உணர்வுபூர்வமாகவும், அதே சமயத்தில் சிந்திக்க வைக்கும் திரைப்படமாகும். இது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது.

67
குபேரா

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி உள்ள திரைப்படம் தான் குபேரா இந்த திரைப்படம் தெலுங்கில் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில் தமிழில் பலத்த அடி வாங்கி உள்ளது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வசூல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் காற்று வாங்கி வருகிறது. பிச்சைக்காரராக இருக்கும் தனுசுக்கு எதிர்ப்பாராத சம்பவம் நடக்கிறது அதனால் அவர் பணக்காரனாக மாறினாரா என்பது தான் இந்த படத்தின் கதை. இந்தத் திரைப்படம் நான்கு நாள் முடிவில் 55 கோடி வசூலித்திருந்த போதிலும் தமிழகத்தின் இதன் வசூல் குறைவாகவே உள்ளது.

77
ஒர்க் அவுட் ஆகாத தெலுங்கு - தமிழ் கூட்டணி

தெலுங்கில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலர் தமிழ் நடிகர்களை வைத்து இயக்கும் படங்கள் பெரிய அளவில் கை கொடுப்பதில்லை. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இந்த படங்களுக்கு வரவேற்பு கிடைக்கும் போதிலும், தமிழகத்தில் இந்த படங்கள் பெரிய அளவில் சோபிப்பதில்லை. தெலுங்கு இயக்குனர்களுடன் தமிழ் நடிகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் பெரும்பாலும் தோல்வியையே சந்திப்பதாக திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories