500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

Published : May 05, 2021, 11:27 AM IST

தெம்மாங்கு பாடகாராகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த டிகேஎஸ் நடராஜன்  உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 

PREV
16
500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராகவும், தெம்மாங்கு பாடகராகவும் வலம் வந்தவர் டி.கே.எஸ் .நடராஜன். அப்போது நாடகத்துறையில் புகழ் பெற்ற டி.கே.எஸ். கலைக்குழுவில் நடித்ததால் டிகேஎஸ் நடராஜன் என அழைக்கப்பட்டார். 

26

நாடோடி, நீதிக்கு தலைவணங்கு, பொன்னகரம், தேன் கிண்ணம், கண்காட்சி, பகடை பனிரெண்டு, ராணி தேனீ, ஆடு புலி ஆட்டம், பட்டம் பறக்கட்டும், மங்களவாத்தியம், உதயகீதம், ஆனந்த கண்ணீர் , இதோ எந்தன் தெய்வம், காதல் பரிசு  உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

36

“வாங்க மாப்பிள்ளை வாங்க” என்ற படத்தில்  சங்கர் கணேஷ் இசையில் டிகேஎஸ் நடராஜன் பாடிய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' என்ற பாடல் தான் அவரை ஒரு தெம்மாங்கு பாடகராக தமிழகம் முழுவதும் அடையாளப்படுத்தியது. "கொட்டாம்பட்டி ரோட்டிலே " என்ற அடுத்த பாடலும் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. 

46

இதனைத் தொடர்ந்து டிகேஎஸ் நடராஜன் தெம்மாங்கு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வாத்தியார்’ படத்திலும்  “என்னடி முனியம்மா” பாடல் ரீமிக்ஸ் செய்து வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த பாடலிலும் டிகேஎஸ் நடராஜன் நடித்திருந்தார்.

56

தெம்மாங்கு பாடகாராகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த டிகேஎஸ் நடராஜன்  உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

தெம்மாங்கு பாடகாராகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த டிகேஎஸ் நடராஜன்  உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

66

அவரது இறுதிச்சடங்கு சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடராஜனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

click me!

Recommended Stories