கன்னடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர், சைத்ரா கோட்டூர்.
கடந்த மாதம் நாகர்ஜுனா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைத்ரா திடீர் என தன்னுடைய வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அவரது வீட்டில் இருந்தவர்கள், உடனடியாக சைத்ராவை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், சைத்ராவை... நாகார்ஜூனா மிரட்டினா திருமணம் செய்து கொண்டதாகவும். இந்த திருமணத்தில் சற்றும் இவருக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.
எனவே இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கையை துவங்கவில்லை. இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே சைத்ரா தற்போது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
எனினும், சைத்ரா இதுவரை இந்த சம்பவம் குறித்து ஏதும் கூறாத நிலையில், அவர் உண்மை என்பதை கூறிய பிறகே... தற்கொலை முயற்சி குறித்த உண்மை காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.