தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜெகமே தந்திரம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள, ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு தான் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜகமே தந்திரம், விரைவில் ஓடிடி தலத்தில் வெளியாக உள்ள நிலையில், மணிரத்னம் இயக்கி வரும் அவரது கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா லட்சுமிக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததாகவும், சோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
மாஸ்க் அணிந்து வெளியே செல்லுதல், சமூக இடைவெளி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் கொரோனா தொற்று தனக்கு ஏற்பட்டு தனிமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவரின் அறிவுரைப்படி முறையான சிகிச்சை பெற்று கொண்டிருப்பதாகவும் விரைவில் அவர் கொரோனாவில் இருந்து குணமாகி விடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ் திரை உலகில் உள்ள பலருக்கு வரிசையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரசிகர்கள் பலர் விரைவில் நலம் பெற்று வர தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.