விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்..! சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி..!

First Published Nov 29, 2020, 6:57 PM IST

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ஒருவரின் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

பிரபல கன்னட நடிகை உமாஸ்ரீ. இவர் அரசியலிலும் ஈடுபட்டு உள்ளார் என்பதும் கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
undefined
இந்த நிலையில் சமீபத்தில் உமாஸ்ரீக்கு சொந்தமான காரை அவரது ஓட்டுநர் கர்நாடக மாநிலத்தில் உள்ள உப்பள்ளி என்ற பகுதியை நோக்கி ஓட்டி சென்றுள்ளார். அப்போது ஓட்டுநர் மட்டுமே அந்த காரில் இருந்துள்ளார். உமா ஸ்ரீ அவருடன் செல்லவில்லை.
undefined
இந்த நிலையில் இந்த கார் பாண்டிவாடா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த டாக்டர் ஸ்மிதாகுட்டி என்பவரின் கார் மீது வேகமாக மோதியது.
undefined
இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் டாக்டர் ஸ்மிதாகுட்டி காரில் இருந்த டாக்டர் ஸ்மிதாகுட்டி, அவரது தாயார் ஷோபா குட்டி மற்றும் டிரைவர் சந்திப் ஆகியோர் உயிரிழந்தனர்.
undefined
உமாஸ்ரீ கார் மிதமான வேகத்தில் வந்ததால் அந்த காரின் ஓட்டுநர் ஒரு சில காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.
undefined
தற்போது இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கர்நாடக மாநில போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எனினும் நடிகை ஒருவரின் கார் இடித்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
undefined
click me!