நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பற்றி யாரும் அறிந்திராத தகவல்கள்... பிறந்த நாள் ஸ்பெஷல்...!

First Published Jun 20, 2020, 2:32 PM IST

ரோடியோவில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஆர்.ஜே.பாலாஜி, இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். சென்னை வெள்ளத்தின் போது தனி மனிதன் நினைத்தால் ஒரு பட்டாளத்தையே திரட்ட முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். அப்படிப்பட்ட மண்ணின் மைந்தன் ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்த நாள். இந்நாளில் அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம் வாங்க... 

ஆர்.ஜே.பாலாஜியின் குடும்பம் அவரது தந்தையால் கைவிடப்பட்டது. அதன் பின்னர் அவரது அம்மா தான் எல்லாவுமாக இருந்து ஆர்.ஜே.பாலாஜியை ஆளாக்கினார்.
undefined
பள்ளியில் படித்த காலத்தில் ஆர்.ஜே.பாலாஜி 19 பகுதிகளில் 27 வீடுகள் மாறியுள்ளதாகவும், 10 பள்ளிகளில் படித்துள்ளதாகவும் அவரே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
undefined
12ம் வகுப்பில் தோல்வியடைந்த ஆர்.ஜே.பாலாஜி, பின்னர் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் பி.எஸ்.சி. கம்யூட்டர் சைன்ஸில் பட்டம் பெற்றார்.
undefined
அத்தோடு நிறுத்திக்கொள்ளாத ஆர்.ஜே.பாலாஜி கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக ஆர்.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கினார்.
undefined
“ஹலோ கோயம்புத்தூர்” என்ற பெயரில் ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பட்டையக் கிளப்பியது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை வந்தார்.
undefined
சென்னையில் உள்ள பிக் எப்.ஃஎம்மில் வேலைக்கு சேர்ந்த ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கிய கிராஸ் டாக் என்ற நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தெரியாத ஒருவருக்கு போன் செய்து கலாய்க்க கூடிய அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பாலாஜி செம்ம சூப்பராக கையாண்டார்.
undefined
பெயரும் புகழும் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர் கிடையாது. கொஞ்சம் சமூக சிந்தனையும் கொண்டவர். லண்டனில் “க்ராஸ் டாக்” போன்ற நிகழ்ச்சியால் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள உடனடியாக அந்த மாதிரி ஷோவை இனி செய்ய மாட்டேன் என கைவிட்டார்.
undefined
இப்போது ஆர்.ஜே.பாலாஜி கோலிவுட்டின் ஒரு அங்கமாக இருந்தாலும் எப்.எம்மில் பணியாற்றி வந்த காலத்தில் சினிமா படங்களையும், திரைப்பிரபலங்களையும் செமையாக கலாய்த்துள்ளார்.
undefined
ஆர்.ஜே.வாக வாழ்க்கையை ஆரம்பித்து காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்ற ஆர்.ஜே.பாலாஜி இப்போது நடிகராக வளர்ந்து நிற்கிறார்.
undefined
தற்போது நயன்தாராவை வைத்து “மூக்குத்தி அம்மன்” படத்தை இயக்கி, நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி அதன் வெளியிட்டிற்காக காத்திருக்கிறார். அவருடைய இயக்குநர் அவதாரம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்களுக்கும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
undefined
click me!