எருமை சாணி யூடியூப் ஊடகத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கடந்த ஆண்டு தன்னுடைய காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
ஹரிஜா யூடியூப் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அதையும் தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார்.
குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஹாரிஜா, சமீபத்தில் நிறைமாத வயிறுடன் Pregnancy போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை வெளியிட அது வைரலாகியது.
இந்நிலையில் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் கணவர் சிவன் வேடத்திலும், ஹாரிஜா பார்வதி வேடத்திலும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குழந்தை பிறந்த தகவலை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார் .
இதையடுத்து , அமர் - ஹாரிஜா தம்பதிகளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.