கொசுவலை போன்ற ஷர்ட் அணிந்து... பளபளக்கும் மேனியை பளீச் என காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்! போட்டோஸ்..!

First Published | Nov 10, 2022, 4:58 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் பிளாக் கலர் மாடர்ன் ட்ரெஸ் போட்டோஸ்... தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

திரையுலகில் முன்னணி நடிகையாக மாறுவதற்கு, அழகு பதுமையாக ஜொலிக்கும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க தேவையில்லை, எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும், திறமையான நடிப்பை வெளிப்படுத்தினால்... ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

'காக்கா முட்டை' படத்திற்கு பின் தான் இவருடைய திரையுலக வாழ்க்கை சூடு பிடிக்க துவங்கியது. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருவது ஒருபுறம் இருந்தாலும், தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள   'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நாளைய தினம் வெளியாக இருந்த நிலையில், திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

கிரிக்கெட் போட்டியின் போது ஆர்.ஜே.பாலாஜியின் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்..!

Tap to resize

இது ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமான விஷயம் என்றாலும் கூட... விரைவிலேயே இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம், மோகன் தாஸ், தீயவர் குழைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, துருவ நட்சத்திரம், உள்ளிட்ட படங்கள் உள்ளன.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சமூக வலைத்தளத்திலிலும் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் நிலையில்,  தற்போது அல்ட்ரா மாடல் உடையில் ரசிகர்களை வசீகரிக்கும் விதமாக பிளாக் கலர் நெட்டெட் ஷர்ட் அணிந்து பளீச் அழகில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

'டிரைவர் ஜமுனா' படக்குழுவின் திடீர் அறிவிப்பு..! சமந்தாவுடன் மோதாமல் பின்வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Latest Videos

click me!