டியூட் படத்தில் கடைசி நேரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி – யார் இந்த ஜம்மு காஷ்மீர் நடிகை?

Published : Oct 20, 2025, 07:05 PM IST

Dude Actress Aishwarya Sharma: டியூட் படத்தில் மமிதா பைஜூவைத் தவிர மற்றொரு நடிகையும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த நடிகை யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
நடிகை ஐஸ்வர்யா சர்மா

கோமாளி படம் மூலமாக தன்னை இயக்குநராக அறிமுகம் செய்த பிரதீப் ரங்கநாதன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி நடித்து வெளியான படம் தான் லவ் டுடே. பட்ஜெட் கம்மி ஆனால், வசூல் அதிகம் என்று சொல்லும் அளவிற்கு ரூ.5 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. இந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து நடிகராக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்து வெளியான படம் தான் டிராகன்.

25
ஐஸ்வர்யா சர்மா

இந்தப் படமும் வசூலில் தாறுமாறாக கல்லாகட்டியது. ரூ.150 கோடி வரையில் டிராகன் படம் வசூல் குவித்து சிறந்த படம் என்ற சாதனையையும் படைத்தது. இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் டியூட். முழுக்க காதல், செண்டிமெண்ட் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். சரத்குமார், ரோகிணி, மமிதா பைஜூ, பிரதீப் ரங்கநாதன், நேகா ஷெட்டி, ஐஸ்வர்யா சர்மா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.

35
டியூட் ரூ.30.35 கோடி வசூல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி டியூட் படம் திரைக்கு வந்தது. பொதுவாக பிரதீப் ரங்கநாதன் படம் என்றாலே வித்தியாசமான கதை, கான்செப்ட் என்று ஏதாவது ஒன்று இருக்கும். அப்படித்தான் இந்தப் படமும் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சாக்னிக் அறிக்கையின்படி ரூ.30.35 கோடி வசூல் குவித்துள்ளது. ஆனால், விக்கிப்பீடியா தகவலின் படி இந்தப் படம் ரூ.45 கோடி வசூல் குவித்திருக்கிறது.

இது இந்த காலத்துல டிரெண்டுனு சொன்னாலும் பழசு தான்; டியூட் 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

45
2ஆவது ஹீரோயின் - ஐஸ்வர்யா சர்மா

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 2ஆவது ஹீரோயின் ஒருவர் நடித்திருந்தார். அந்த நடிகை யார்? இந்தப் படத்தின் மூலமாக திடீரென்று டிரெண்டாக என்ன காரணம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு பக்க பலமாக இருந்தது மமிதா பைஜூவிற்கு பிறகு இந்த நடிகையை சொன்னலாம். ஆரம்பத்தில் அவருடன் பல காட்சிகளில் வந்திருந்தார்.

55
ஐஸ்வர்யா சர்மா

அந்த நடிகை தான் ஐஸ்வர்யா சர்மா. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர். இவர் ஒரு மாடலாக இருந்தார். ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், பெரியளவில் பேசப்படவில்லை. இந்த நிலையில் தான் இப்போது டியூட் படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இனி வரும் காலங்களில் ஐஸ்வர்யா சர்மாவிற்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடித்த 12 படங்களில் 2 மட்டுமே ஹிட்.. ஆனாலும் குறையாத மவுசு: யார் அந்த நடிகை?

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories