சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'க்கு குட்பை! தளபதியை இயக்க ஜோராக கிளம்பிய நெல்சன்..!

First Published | Jan 3, 2021, 1:36 PM IST

இந்நிலையில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனை சிவகார்த்திகேயன், இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேன் நடிப்பில் சமீபகாலமாக வெளியான, “சீமராஜா”, “வேலைக்காரன்”, “மிஸ்டர் லோக்கல்” ஆகிய படங்கள் எதுவுமே பெரிதாக பாக்ஸ் ஆபீஸ் வசூல் கொடுக்கவில்லை. தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாண்டியராஜன் கைகொடுத்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கிய “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். பாண்டியராஜனின் அசத்தலான திரைக்கதையும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பும் மார்க்கெட்டிங் யுக்தியும் படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியது.

இதையடுத்து இரும்பு திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த “ஹீரோ” திரைப்படம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சூப்பர் ஹீரோ கதை அம்சத்துடன் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை தழுவியது என்பது நாம் அறிந்தது தான்.
எப்படியாவது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற வேகத்தில் உள்ள சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில், 'டாக்டர்' , 'அயலான்' என இரு படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வந்தார்.
கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, கோலமாவு கோகில பட இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் முழு வீச்சில் நடந்து வந்தது.
இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் 'கேங் லீடர்' பட புகழ் பிரியங்கா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். யோகி பாபு மற்றும் வினய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனை சிவகார்த்திகேயன், இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் விரைவில் அவை முடிக்கப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த கையேடு, தளபதியை வைத்து 65 ஆவது படத்தை இயக்க தயாராகிவிட்டார் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற் சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!