‘காதல்’ படத்தில் சந்தியாவிற்கு பதிலாக நடிக்கவிருந்தது இவரா?... இப்ப ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிட்டாரே...!

First Published | Nov 25, 2020, 5:26 PM IST

இந்த படத்தில் நடித்த சந்தியாவிற்கும், பரத்திற்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது

2004ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் காதல்.
இந்த படத்தில் நடித்த சந்தியாவிற்கும், பரத்திற்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சந்தியாவிற்கு இதுதான் முதல் படம் என்றாலும் அந்த சாயல் துளியும் இன்றி சூப்பராக நடித்திருப்பார்.
Tap to resize

இந்த படத்தில் சந்தியாவிற்கு தோழியாக நடித்த இளம் நடிகையை நியாபகம் இருக்கிறதா? ‘உங்க போதைக்கு நாங்க ஊறுகாய்’ என்ற ஒற்றை வசனம் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானார்.
அவருடைய பெயர் சரண்யா நாக், சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 1998ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தில் வெளியான நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
சரண்யா நாக் தான் முதலில் காதல் படத்தில் நாயகியாக நடிக்க தேர்வாகியுள்ளார். ஆனால் பார்க்க மிகவும் சின்ன பெண்ணாக தெரிந்ததால் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவருக்கு பதிலாக சந்தியாவை தேர்வு செய்துள்ளார்.
இருந்தாலும் அதே படத்தில் சந்தியாவிற்கு ஜோடியாக நடித்து ஏகப்பட்ட ஸ்கோர் செய்திருப்பார் சரண்யா நாக். அதன்பின்னர் துள்ளுற வயசு, ஒரு வார்த்தை பேசு ஆகிய படங்களில் ஹீரோயினாக கமிட்டானார். ஆனால் அந்த படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டது.
தமிழில் நடிக்க துவங்கிய சரண்யா 2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்திருந்தார்.சிறிது நேரமே வந்தாலும் அந்த கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தற்போது ஓவராக உடல் எடை கூடி குண்டாக இருக்கும் சரண்யா நாக்கின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள சரண்யாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Latest Videos

click me!