ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' கதையை... எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே... கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அரச வைத்துள்ளனர்.
இப்படி பல பாசிட்டிவாக விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மணிரத்னத்துக்கு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
இது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் முதல் பக்கத்திலேயே படம் நீளமாக இருப்பதாகவும், சில காட்சிகள் பொறுமையாக நகர்வதாக ரசிகர்கள் கூறி வரும் நிலையில், இரண்டாம் பாகம் 3 மணிநேரத்தை கடந்து செல்லுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சவாலை எப்படி மணிரத்தினம் சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.