Annaatthe Movie: சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

Published : Nov 05, 2021, 03:22 PM IST

திரையுலகில் தொடர்ந்து தரமான படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், (Keerthy suresh) 'அண்ணாத்த' (Annaatthe) படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
15
Annaatthe Movie: சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. விஸ்வாசம் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்த இந்த படத்தின் மீதான எதிர்பாப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்தாலும், தலைவரின் ரசிகர்களின் எதிர்பாப்புக்கு ஏற்ற போல் இந்த படம் இல்லை என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய வருத்தம்.

 

25

தங்கச்சி சென்டிமென்ட்டை அதிகமாக்கி, தலைவரின் மாஸ்ஸை சிவா குறைத்து விட்டதாக ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை குமுறி வருகிறார்கள். நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் இருந்தாலும் படத்திற்கு தொடர்ந்து கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.

 

35

இது ஒருபுறம் இருக்க தற்போது கீர்த்தி சுரேஷ், 'அண்ணாத்த' படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிக்க எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

45

ஹீரோயினாக நடிக்க என்ன சம்பளம் பெறுவாரா? அதே அளவிற்கு சுமார் 2 கோடி இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார். இதை கேட்ட இளம் நடிகைகள் பலர்... தங்கையாக நடிக்க இவ்வளவு சம்பளமா? என வாயடைத்து போய் உள்ளனர்.

 

55

இதே போல் அஜித் நடிப்பில் வெளியான 'வேதாளம்' படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தன்னை ஒரு ஹீரோயின் என்பதை மறந்து அதிக சம்பளத்திற்காக அடுத்தடுத்து தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருவதால்? இவரது ஹீரோயின் கேரியர் பாதிக்க வாய்ப்பிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

 

 

click me!

Recommended Stories