ஷாருக்கான் மேனேஜர் பூஜா தத்லானி மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா.! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்

Published : Feb 15, 2023, 06:51 PM ISTUpdated : Feb 15, 2023, 06:52 PM IST

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானியின் சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

PREV
15
ஷாருக்கான் மேனேஜர் பூஜா தத்லானி மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா.! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, அவரது பணிகளை மேற்கொண்டு வருகிறார். அனைத்து முக்கியமான நிகழ்வுகள், விருது விழாக்கள், கூட்டங்கள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் ஷாருக்கானுடன் நீங்கள் பார்த்திருக்கலாம்.

25

ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி இந்தி பட உலகின் பிரபலர்  பிஆர் ஆவார். பூஜா தத்லானி சமீபத்தில் தனது புதிய இல்லத்தில் காலடி எடுத்து வைத்தார். இது வேறு யாருமல்ல முதலாளி பெண்மணியான, அதாவது  ஷாருக்கானின் மனைவி கௌரி கானால் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

35

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் எழுதிய பூஜா தத்லானி, என் புதிய இல்லத்தில் அடியெடுத்து வைப்பது, அரவணைப்பு மற்றும் மகிழ்ச்சியை உருவாக்க புதிய கனவுகளுக்கு. இந்த புதிய பயணத்தை தொடங்குவதற்கு வேறு யாரும் இல்லாத கௌரிகான் என் குடும்பத்தை விட சிறந்த வழி என்ன.. அவள் என் வீட்டை ஒரு வீடாக மாற்றினாள். இங்கே பாருங்கள் என்று பதிவிட்டார்.

45

கடந்த வியாழக்கிழமை பூஜாவின் புதிய இல்லத்தில் மனைவி கௌரி கான் மற்றும் மகன் ஆர்யன் கானுடன் ஷாருக்கான் ஆகியோர் இருந்தனர்.  இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பூஜா தத்லானி கடந்த 2012 முதல் ஷாருக்கின் மேனேஜர் ஆக தொழில்முறை வேலை ஒப்பந்தங்களை நிர்வகித்து வருகிறார்.

55

கே.கே.ஆர் மற்றும் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட நிர்வாகத்தை கவனித்தும் வருகிறார். MensXP.com என்ற நிறுவனத்தின் கூற்றுப்படி, பூஜா தத்லானியின் நிகர மதிப்பு ரூ. 45 முதல் 50 கோடி வரை இருக்கும். அவர் ஆண்டுக்கு ரூ.7 முதல் 9 கோடி வரை சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஆர்யன் கான் வழக்கு உட்பட பூஜா ஷாருக் குடும்பத்துடன் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories