
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறியவர் ஜெயம் ரவி. இவருடைய தந்தை திரைப்பட படத்தொகுப்பாளர் என்பதால், ஜெயம் ரவிக்கு தன்னுடைய சிறு வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதேபோல் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவும், சிறுவயதில் இருந்தே திரைப்பட இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்டவர். அந்த வகையில் தன்னுடைய தம்பி ஜெயம் ரவியை வைத்து... 'ஜெயம்' என்கிற தெலுங்கு படத்தை ரீமேக் செய்து மாஸான வெற்றியை கொடுத்தார் மோகன் ராஜா. இந்த படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது மட்டுமின்றி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த அறிமுகத்தையும் ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தாஸ், மழை, இதய திருடன், போன்ற பல படங்களில் ஜெயம் ரவி நடித்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு உலக அளவில் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் ஜெயம் ரவி ராஜராஜ சோழன் அருண் மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் ஜெயம் ரவி, எவ்வளவு பிஸியாக நடித்து வந்தாலும்... தன்னுடைய குடும்பம் மற்றும் மனைவி மீது அதிக அக்கறை கொண்டவர். ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், பெற்றோர் சம்பந்தத்துடன் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 15 வருடங்கள் ஆகும் நிலையில், ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த ஒரு வருடமாகவே ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி ஜோடிக்கு இடையே பர்சனலாக சில கருத்து வேறுபாடுகள் போய்க் கொண்டிருந்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக பல தகவல்கள் வெளியானது. ஆனால் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருமே இது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் ஆத்தி தன்னுடைய சமூக வலைதளத்தில் இருந்து... ரவியுடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் நீக்கி புகைந்து கொண்டிருந்த செய்திகளை பற்றி எரிய செய்தார்.
தற்போது ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்தை உறுதி செய்துள்ள நிலையில், ஜெயம் ரவியின் மனைவி யார்? அவருடைய பெற்றோர் யார்? என்கிற தகவல் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறி உள்ளது. அதன்படி ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, பிரபல சின்னத்திரை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் ஒரே மகள் ஆவார். ஜெயம் ரவியை விட மூன்று மடங்கு கோடீஸ்வர குடும்பத்தில்... அதுவம் ஒரே மகளாக வாழ்ந்தவர் ஆர்த்தி. தன்னுடைய பள்ளி படிப்பை சென்னையில் முடிந்த நிலையில், பின்னர் பிரபல தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை தொடர்ந்தார்.
கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் ஜெயம் ரவி ஆர்த்தியை முதல் முதலாக பார்க்க நேர்ந்தது. பின்னர் அவரை எப்படியோ தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தினார். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் ஜெயம் ரவி சினிமாவில் கவனம் செலுத்த, ஆர்த்தி ஸ்காட்லாண்டில் உள்ள கல்லூரியில் 'வேர்ல்ட் அட்மினிஸ்ட்ரேஷன்' என்கிற பட்டப்படிப்பை தேர்வு செய்து நடித்தார். இரண்டு வருட பட்ட படிப்பை வெளிநாட்டில் முடித்து விட்டு இந்தியா திரும்பிய ஆர்த்தி... பின்னர் ஜெயம் ரவியுடன் சில வருடம் டேட்டிங் செய்த நிலையில், இதைதொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
சுஜாதா - விஜயகுமார் இருவரும் தன்னுடைய மகளின் ஆசைக்காக திருமணத்திற்கு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் சம்மத்தினர். ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார், 'சுஜாதா ஹோம் மூவி மேக்கர்ஸ்' என்கிற நிறுவனத்தின் மூலம், சன் டிவியில் ஏராளமான சீரியல்களை தயாரித்துள்ளார். ஜெயம் ரவியை வைத்து சுஜாதா சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தன்னுடைய கணவரை ரவியை விட மூன்று மடங்கு சொத்துக்கு அதிபதி என கூறப்படுகிறது.
15 வருட திருமண வாழ்க்கை முடிந்தது... மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தது ஏன்? ஜெயம் ரவி விளக்கம்