நாளை முதல் டிஸ்கோ! தலைவர் 171 அப்டேட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

First Published | Apr 21, 2024, 9:19 PM IST

ரஜினியின் தலைவர் 171 படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டும் என்று அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளப் பதிவு மூலம் அறிவித்துள்ளார்.

Thalaivar 171 and Lokesh Kanagaraj

ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Thalaivar 171 Rajinikanth

அந்தப் படத்துக்கு இப்போதைக்கு தலைவர் 171 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்க உள்ளார்.


Thalaivar 171 title

இந்தப் படத்தில் ரஜினியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ரஜினி கையில் தங்கக் கடிகாரமும் விலங்கும் அணிந்து இருப்பது போல அந்த போஸ்டரில் தோன்றினார். இதுவும் ரஜினியின் மற்றொரு 'தாதா' படமாக இருக்கும் என்று தகவல் பரவியது.

Thalaivar 171 Poster

தங்கக் கடத்தல் பின்னணியில் தான் தலைவர் 171 படம் உருவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பாலிவுடன் நடிகர் ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நடிகை ஷோபனாவும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Thalaivar 171 update

ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகிய நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்தின் தலைப்பு நாளை (ஏப்ரல் 22) வெளியாக உள்ளது என இயக்குநர் லோகேஷ் அறிவித்துள்ளார்.

Thalaivar 171 News

இச்சூழலில் தலைவர் 171 படத்துக்கு கழுகு, ராணா, தங்கம், கடிகாரம் என பெயர் இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் கணிப்புகள் பரவி வருகின்றன.

Latest Videos

click me!