Goat Number Plate : கோட் படத்தில் பயன்படுத்திய நம்பர் பிளேட்டை முதல்வர் விஜய்க்கு பரிசாக கொடுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நடிகர் விஜய் பதவியேற்றதையடுத்து, அரசியல் மற்றும் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தொடர்ந்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் சந்திப்பு தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. விஜய்யை வைத்து ‘கோட்’ திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார். இந்த சந்திப்பின் போது அவர் வழங்கிய சிறப்பு பரிசே ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
24
அன்றே கணித்த வெங்கட் பிரபு
கடந்த 2024ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெங்கட் பிரபு இயக்கிய அப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் நடித்திருந்தனர். அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அப்படத்தில், விஜய் பயன்படுத்தும் காரின் பதிவு எண் “TN07 CM 2026” என இடம்பெற்றிருந்தது. அப்போது ரசிகர்கள் அந்த எண்ணை அரசியல் எதிர்காலத்துடன் இணைத்து, “2026ல் விஜய் முதல்வராக வருவார்” என சமூக வலைதளங்களில் வைரலாக்கியிருந்தனர்.
34
வெங்கட் பிரபுவின் பரிசு
தற்போது அதே அவர்கள் குறிப்பிட்டதுபடியே 2026ஆம் ஆண்டில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை நினைவுகூரும் வகையில், திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட அதே “TN07 CM 2026” என்ற நம்பர் பிளேட்டை இயக்குநர் வெங்கட் பிரபு பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த வெங்கட் பிரபு, “ஒரு கற்பனை இன்று நிஜமாகி வரலாறாகியுள்ளது” என உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பரிசில் விஜய் முதல்வராவார் என்பதை முதன்முதலில் யூகித்தது வெங்கட் பிரபு அண்ட் டீம் தான் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த பதிவு தற்போது விஜய் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கிய கோட் திரைப்படம் உலகளவில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. அப்படத்திற்கு பின்னர் விஜய் நடிப்பில் ஒரு படமும் திரைக்கு வரவில்லை. அவரின் கடைசி படமான ஜனநாயகன் திரையரங்குகளில் ரிலீஸாக தயாராக உள்ளது. ஆனால் இதுவரை அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.