Director Lokesh Kanagaraj salary :விஜய் சேதுபதியை விட குறைவான சம்பளம் வாங்கிய லோகேஷ் கனகராஜ்!எவ்வளவு தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : May 31, 2022, 01:58 PM ISTUpdated : May 31, 2022, 02:01 PM IST

விஜயின் மாஸ்டர் படத்தில் விக்ரம்  படத்தில் 30 லட்சம் மட்டும் வாங்கியதாக கூறப்பட்டிருந்த நிலையில் விக்ரம் படத்தில் அவர் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

PREV
15
Director Lokesh Kanagaraj salary :விஜய் சேதுபதியை விட குறைவான சம்பளம் வாங்கிய லோகேஷ் கனகராஜ்!எவ்வளவு தெரியுமா?
KAITHI

மாநகரம் என்ற சிறிய பட்ஜெட் படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இரண்டாவது வாய்ப்பாகவே கார்த்தியின் படத்தை இயக்கம் வாய்ப்பை பெற்றார். இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. டார்க் பேக்ரவுண்டில் ஒரு நாள் இரவில் நடக்கும் கதைக்களத்தை கொண்ட இந்த படம் ரசிகர்கள்  மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் வெறும் ரூ. 30 லட்சம் ரூபாயை மட்டுமே சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

25
MASTER

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜயின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். மாஸ்டர் என பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தார். படம் நல்ல வசூலை பெற்று கொடுத்தது. விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதில் லோகேஷ் கனகராஜ் ஒன்றரை கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

35
VIKRAM

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ். நான்கு வருட இடைவெளிக்கு பிறகு கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

45
VIKRAM

 ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக கமல் நடித்துள்ள இந்த படம் 1986-ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சி என கூறப்படுகிறது. இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து ரஜினியின் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் விக்ரம் படத்தில் இயக்குனர் வாங்கிய சம்பளம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது.

55
VIKRAM MOVIE

விக்ரம் படத்தில் கமலுக்கு 50 கோடி சம்பளம், விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாயும், பஹத் பாசிலுக்கு 4 கோடி ரூபாயும், மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தலா 4 கோடி ரூபாயும்,  இப்படத்தின் இசையமைப்பாளர் அனிரூத்துக்கு 4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 8 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

click me!

Recommended Stories