Hari, Na Muthukumar
இயக்குனர் ஹரியும் நடிகர் சீயான் விக்ரமும் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் சாமி. கடந்த 2003-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பங்கும் முக்கியமானது. அவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்து அந்த சமயத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அதில் நா முத்துக்குமார் எழுதிய திருநெல்வேலி அல்வாடா பாடலில் இயக்குனர் ஹரி செய்த தில்லுமுல்லு வேலையை பற்றி பார்க்கலாம்.
Tirunelveli Alvada Song
நா முத்துக்குமார் எழுதும் பாடல்களில் நிச்சயம் டீடெயிலிங் இருக்கும். அவர் எந்த பாடல் எழுதினாலும் அலசி ஆராய்ந்து தான் எழுதுவார். அப்படி திருநெல்வேலி அல்வாடா பாடலிலும் ஒவ்வொரு வரிகளையும் அலசி ஆராய்ந்து எழுதி இருப்பார். உதாரணத்திற்கு அப்பாடலில் இடம்பெறும் ‘பாளையங்கோட்டையில் ஜெயிலு பக்கம் ரயிலு கூவும்’ என்கிற வரியை சொல்லலாம். அந்த வரி கோர்வையாக இருப்பதற்காக பயன்படுத்தி இருப்பார் என நினைக்கலாம். ஆனால் உண்மையில் பாளையங்கோட்டை ஜெயில் அருகே ரயில் தண்டவாளம் அமைந்திருக்கும். அப்பகுதியில் ரயில் செல்லும்போதெல்லாம் ரயில் ஒலி எழுப்பியபடி செல்வதை நோட் பண்ணிய நா முத்துக்குமார் அதை தன் பாடல் வரியில் சேர்த்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... மாட்டிக்கிட்ட பங்கு... ஒரே பாடல் வரிகளை மாத்தி மாத்தி 6 பாடல்களில் பயன்படுத்திய நா முத்துக்குமார்!!
Saamy Movie
அப்படி டீடெயிலிங்கோடு பாடல்களை எழுதும் நா முத்துக்குமாருக்கே விபூதி அடித்திருக்கிறார் இயக்குனர் ஹரி. அதே திருநெல்வேலி அல்வாடா பாடலில், ‘நாட்டுச் சாலை சக்கரை என்ன செக்கு போல சுத்துற’ என்கிற இடம்பெற்று இருக்கும். இந்த வரியை மட்டும் இயக்குனர் ஹரி எழுதினாராம். இந்த வரியை கேட்டதும் நல்லா தான் இருக்கு, ஆனா நாட்டுச் சாலை எங்க இருக்கு சார் என நா முத்துக்குமார் கேட்டதும், அது பேமஸ் ஆன ஊருங்க, அங்க தான் சர்க்கரை ஆலை இருக்கு என வாய்கூசாமல் பொய் சொல்லி இருக்கிறார் ஹரி.
Director Hari Wife Preetha
நா முத்துக்குமாரும் ஹரி சொன்னதை உண்மை என நம்பி, அந்த பாடல் வரியை படத்தில் பயன்படுத்த அனுமதி கொடுத்திருக்கிறார். ஆனால் உண்மையில் நாட்டுச்சாலை என்பது இயக்குனர் ஹரியின் காதல் மனைவி ப்ரீத்தாவின் சொந்த ஊராம். அவரை இம்பிரஸ் செய்வதற்காக தான் இந்த வரியை எழுதி இருக்கிறார் ஹரி. ஆனால் இந்த விஷயம் தெரியாமல் பாடலாசிரியர் நா முத்துக்குமார் அந்த வரிகளை பாடலில் பயன்படுத்தி, அந்த பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ‘ஐயரு பொண்ணு மீன்வாங்க வந்தா’ நா முத்துக்குமார் எழுதிய இந்த பாடல் வரியில் இப்படி ஒரு லவ் ஸ்டோரி ஒளிஞ்சிருக்கா!