காரில் இருந்து இறங்கி அழுது கொண்டே ஓடிய எமி ஜாக்சன்... காரணம் என்ன தெரியுமா?

First Published Aug 7, 2020, 4:50 PM IST

மதராசப்பட்டினம் ஷூட்டிங்கின் போது எமி ஜாக்சனுடன் நடந்த சில சுவாரஸ்யமான, நகைச்சுவையான சம்பவங்களை இயக்குநர் ஏ.எல்.விஜய் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்ட திரைப்படம் மதராசப்பட்டினம். இந்த படம் மூலமாக தான் இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்தார்.
undefined
முதன் முதலில் மதராசப்பட்டினம் பட ஷூட்டிங்கிற்காக தான் எமி ஜாக்சன் தனது நாட்டை விட்டு, வெளியே வந்திருக்கிறார் போன்ற சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.
undefined
முதன் முறையாக இந்தியா வந்த எமி ஜாக்சனுக்கு இங்கு இருந்த பல விஷயங்கள் வித்தியாசமாக இருந்துள்ளது. ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய மறுகணமே ரோட்டில் நிற்கும் பசுவை பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளார்.
undefined
அதனைத் தொடர்ந்து ஒரு நாள் மவுண்ட் ரோடு சாலையில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது 40 டிகிரி அளவிற்கு வெயில் கொளுத்தியுள்ளது. அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய எமி, அழுது கொண்டே ஓடியுள்ளார்.
undefined
அய்யோ என்ன ஆச்சு என பதறியடித்துக் கொண்ட போய் பார்த்த ஏ.எல். விஜய் உள்ளிட்ட படக்குழுவினருக்கு எமி ஜாக்சன் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
undefined
அன்றைய தினம் ஷூட்டிங்கிற்காக ஒரு குதிரையை அழைத்து வந்திருக்கிறார்கள். அது கொதிக்கும் வெயிலில் நிற்பதை பார்த்த எமி ஜாக்சன் மனம் தாங்காமல் கதறி அழுதுள்ளார். மேலும் அதை தான் தத்தெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
undefined
அதன் பின்னர் அந்த குதிரையை நிழலில் நிறுத்தி, நல்ல உணவு கொடுத்த பிறகே எமி ஜாக்சன் சமாதானம் ஆகியுள்ளார்.
undefined
தமிழ் மொழி தெரியாவிட்டாலும் நடிப்பின் மீது எமி ஜாக்சனுக்கு அதிக ஆர்வம் இருந்ததாக கூறும் ஏ.எல்.விஜய், இந்திய கலாச்சாரம் மற்றும் பிற கதாபாத்திரங்கள் குறித்து அறிய மிகவும் முயற்சி செய்தார் என எமி ஜாக்சனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
undefined
click me!