ரன்வீர் சிங் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற படம் துரந்தர். ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளிய இப்படம் தற்போது சர்ப்ரைஸாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
ரன்வீர் சிங் நடித்த ஆல்டைம் பிளாக்பஸ்டர் படமான 'துரந்தர்' பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனால் நள்ளிரவு 12 மணி முதல் படம் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியதால் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருந்தது. ஓடிடியில் வந்ததும், நெட்ஃபிளிக்ஸ் பதிப்பிற்காக 'துரந்தர்' சுருக்கப்பட்டதா என்ற புதிய விவாதம் எழுந்துள்ளது.
24
ட்ரிம் செய்யப்பட்ட வெர்ஷன்
திரையரங்குகளில் 'துரந்தர்' படத்தின் நீளம் 3 மணி 34 நிமிடங்கள். ஆனால் நெட்ஃபிளிக்ஸில் படத்தின் நீளம் 3 மணி 25 நிமிடங்களாகக் காட்டப்படுகிறது. அதாவது சுமார் 9-10 நிமிடங்கள் குறைவு. இந்த வேறுபாடு ரசிகர்களைக் குழப்பியுள்ளது. தயாரிப்பாளர்கள் சில காட்சிகளை நீக்கிவிட்டார்களா அல்லது இது தொழில்நுட்பப் பிழையா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
34
தமிழிலும் வெளியான துரந்தர்
திரையரங்குகளில் 'துரந்தர்' இந்தியில் மட்டுமே வெளியானது. ஆனால் நெட்ஃபிளிக்ஸில் இதை இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோவிலும் பார்க்கலாம். இது தென்னிந்தியாவிலும் படத்தின் வரவேற்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓடிடியில் வெளியான போதிலும், 'துரந்தர்' திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
2025-ம் ஆண்டு டிசம்பர் 5ந் தேதி அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம், இந்தியாவில் ரூ.900 கோடியும், உலகளவில் ரூ.1350 கோடியும் வசூலித்துள்ளது. ஓடிடி வெளியீடு பாக்ஸ் ஆபிஸ் வசூலை பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். துரந்தர் திரைப்படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார். அவர் தமிழில் தெய்வத் திருமகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஆவார். இப்படம் மூலம் பாலிவுட்டின் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.