3 நாளில் 500 கோடி! இந்திய சினிமாவையே மிரள வைத்த 'துரந்தர் 2'! பாக்ஸ் ஆபிஸில் அடுத்தடுத்த சரித்திரம்!

Published : Mar 22, 2026, 04:06 PM IST

Dhurandhar 2 worldwide box office collection day 3 : 2026-ன் மிகப்பெரிய ஆக்சன் படமான 'துரந்தர் 2' உலகளவில் மூன்றே நாட்களில் ரூ. 500 கோடி வசூலித்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.

PREV
14
Dhurandhar 2 worldwide box office collection day 3

துரந்தர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான மூன்று நாட்களிலேயே இந்த படம் ரூ.500 கோடி கிளப்பில் இணைந்துள்ளது என்பது திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தகவல்களின் படி, இந்த படம் உலகளவில் ரூ.501.04 கோடி வசூலை எட்டியுள்ளது. வெளிநாட்டு சந்தையில் மட்டும் ரூ.96.50 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் நெட் வசூல் ரூ.339.37 கோடியும், மொத்த (gross) வசூல் ரூ.404.54 கோடியும் கிடைத்துள்ளது. இது படத்தின் மாபெரும் வரவேற்பை காட்டுகிறது.

24
Dhurandhar 2 crossed 500 crore in 3 days

வாராந்திர வசூல் விவரங்களை பார்க்கும்போது, பேட் பிரிவியூ மூலம் ரூ.43 கோடி வசூல் கிடைத்துள்ளது. முதல் நாளில் ரூ.102.55 கோடி, இரண்டாம் நாளில் ரூ.80.72 கோடி, மூன்றாம் நாளில் ரூ.113 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மூன்றாம் நாளில் 81.6% ஆக்யுபென்சி கிடைத்துள்ளது. இரண்டாம் நாள் 62.6% மற்றும் முதல் நாள் 67.8% ஆக இருந்தது. மொத்தம் 20,000-க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.

முதலில் விஜய்க்குத் தான் அந்த கதை! 'கருப்பு' படத்தின் சீக்ரெட் சொன்ன ஆர்.ஜே. பாலாஜி! சூர்யா உள்ளே வந்தது எப்படி?

34
Dhurandhar 2 box office collection day-wise

இந்த படம் War மற்றும் Tiger 3 போன்ற படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. கதையைப் பொறுத்தவரை, ரெஹ்மான் டக்காய்த் மரணத்திற்குப் பிறகு நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இதில் ஹம்சா என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவர் இந்திய உளவு அதிகாரியாக பாகிஸ்தானில் உள்ள கும்பல்களை ஒவ்வொன்றாக அழிக்கும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

கேள்விக்குறியான மகளின் வாழ்க்கை: இன்னொருத்தியுடன் பழக்கமா? மாப்பிள்ளையிடம் கேட்ட மாணிக்கத்துக்கு விழுந்த அடி!

44
துரந்தர் 2 வசூல் விவரம்

மேலும் சஞ்சய் தத் நடித்த சௌதரி அஸ்லம் கதாபாத்திரமும் மாதான் மற்றும் Arjun Rampal ஆகியோரின் கதாபாத்திரங்களும் பாராட்டைப் பெற்றுள்ளன. இயக்குநர் Aditya Dhar அவர்களின் பணிக்கும் மிகுந்த பாராட்டு கிடைத்து வருகிறது. மொத்தத்தில், துரந்தர் 2 படம் வசூல் மற்றும் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வருகிறது. இன்னும் வர நாளில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories