துரந்தர் 2 படம் பார்த்து ரஜினிகாந்த் போட்ட ரிவ்யூ... மெர்சலான இயக்குநர் ஆதித்யா தர்..!

Published : Mar 24, 2026, 10:39 AM IST

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் துரந்தர் 2 படத்தை பார்த்து ரசித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

PREV
14
Rajinikanth Praises Dhurandhar 2

ரன்வீர் சிங்கின் 'துரந்தர் 2' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. பாலிவுட் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவிலிருந்தும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தைப் பாராட்டி, இயக்குநர் ஆதித்யா தர்-ஐ 'பாக்ஸ் ஆபிஸின் பாஸ்' என்று புகழ்ந்துள்ளார். இந்த படத்தை பார்த்து மெர்சலாகிய ரஜினிகாந்த், தன்னுடைய எக்ஸ் தளத்தில் தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

24
ரஜினிகாந்த் போட்ட ட்வீட்

அதில், "என்ன ஒரு படம்... துரந்தர் 2!!! ஆதித்யா தர் பாக்ஸ் ஆபிஸின் பாஸ்!!! ரன்வீர் சிங் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஜெய் ஹிந்த்." என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு துரந்தர் 2 பட இயக்குநர் ஆதித்யா தர் நன்றி தெரிவித்து உள்ளார். ரஜினிகாந்துக்கு முன்பே, தென்னிந்தியாவின் பல நட்சத்திரங்கள் 'துரந்தர் 2' படத்தை மனதார பாராட்டியுள்ளனர். அவர்களில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் அல்லு அர்ஜுன், நாகார்ஜுனா, வெங்கடேஷ் தக்குபாடி, மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் அடங்குவர்.

34
வசூல் மழை பொழியும் துரந்தர் 2

ரன்வீர் சிங்கின் 'துரந்தர் 2' திரைப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்தப் படம் முதல் திங்கட்கிழமை அன்று சுமார் 65 கோடி ரூபாய் வசூலித்தது. இதன் மூலம், இந்தியாவில் படத்தின் மொத்த வசூல் சுமார் 519.12 கோடி ரூபாயாகவும், உலகளாவிய வசூல் 829.76 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 'துரந்தர் 2' திரைப்படம் மார்ச் 19ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 18 அன்று, படத்தின் ப்ரிவ்யூ காட்சிகள் நடைபெற்றன. அப்போது, சுமார் 12,735 காட்சிகளில் திரையிடப்பட்டு, 43 கோடி ரூபாய் வசூலித்து, இந்திய சினிமாவின் மிகப்பெரிய கட்டண ப்ரிவ்யூ சாதனையை படைத்தது.

44
துரந்தர் 2 இலக்கு

ப்ரிவ்யூ நாளில் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் இந்த சாதனையை படம் நிகழ்த்தியுள்ளது. ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள 'துரந்தர் 2' படத்தின் வேகத்தைப் பார்க்கும்போது, இது விரைவில் உலகளாவிய தரவரிசையில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் 2000 கோடி ரூபாய் கிளப்பில் நுழைவதே இதன் அடுத்த இலக்கு. தற்போது அந்த கிளப்பில் அமீர் கான் நடித்த 'தங்கல்' திரைப்படம் மட்டுமே உள்ளது. அந்த சாதனையை துரந்தர் 2 திரைப்படம் அசால்டாக எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories