அச்சு அசல் சமந்தா போலவே மாறிய தர்ஷா குப்தா.... சாகுந்தலம் கெட்-அப்பில் நடத்திய வேறலெவல் போட்டோஷூட் இதோ

First Published | Apr 23, 2023, 2:31 PM IST

சாகுந்தலம் படத்தில் நடித்த நடிகை சமந்தா போல் கெட்-அப் போட்டு தர்ஷா குப்தா நடத்தியுள்ள போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ரிலீஸ் ஆன திரைப்படம் சாகுந்தலம். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகை சமந்தா சாகுந்தலையாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருந்தார்.

குணசேகரன் இயக்கியிருந்த இப்படத்தை நீலிமா குணா தயாரித்து இருந்தார். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்தனர்.

Tap to resize

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன சாகுந்தலம் திரைப்படம் மந்தமான திரைக்கதை காரணமாக விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கியதோடு பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வியை சந்தித்தது. இப்படம் வெறும் ரூ.6 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... குந்தவையாக நடிக்க திரிஷாவுக்கு கம்மி சம்பளம்... பொன்னியின் செல்வன் படத்திற்காக மொத்தமே இவ்வளவுதான் வாங்கினாரா?

இருப்பினும் இப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே இதன் டிஜிட்டல் உரிமையை படக்குழு உஷாராக ரூ.35 கோடிக்கு விற்பனை செய்துவிட்டதாம். அதேபோல் சாட்டிலைட் உரிமையையும் பெரிய தொகைக்கு விற்றுவிட்டால் பெரியளவில் நஷ்டமின்றி தப்பித்துவிட்டலாம் என தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளாராம்.

சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தாலும், அப்படத்திற்காக சமந்தா போட்ட கெட் அப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதனால் அவரைப்போலவே உடை அணிந்து ஏராளமானோர் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், தற்போது நடிகை தர்ஷா குப்தா, சமந்தாவின் சாகுந்தலம் கெட்-அப்பில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் தர்ஷா குப்தாவை பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருவதோடு அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... குரலால் மயக்கிய செந்தூரப்பூ... பாடகி எஸ்.ஜானகியின் பிறந்தநாள் இன்று - அவரைப்பற்றிய 10 ஆச்சர்ய தகவல்கள் இதோ

Latest Videos

click me!