நடிகை தனுஷ், தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆகி விடுகிறார். அந்த வகையில், இட்லி கடை முடிவடைந்த கையேடு பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகி வரும் ’Tere Ishk Mein’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
தனுஷின் மூன்றாவது பாலிவுட் படம்
அந்த வகையில் தற்போது டெல்லியில் காதல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ஹீரோயின் கிருத்தி சனோன் இருவரும் பைக்கில் பயணிக்கும் காட்சி படமாக்கப்பட்டுளள்து. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தனுஷ் இந்தியில், கடந்த 2013 ஆம் வெளியான 'ராஜண்ணா' மற்றும் 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தனுஷின் இட்லி கடைக்கு எகிறும் மவுசு! ஓடிடி ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?
Tere Ishk Mein படப்பிடிப்பு புகைப்படங்கள்:
இதை தொடர்ந்து இவர் நடிக்கும் மூன்றாவது பாலிவுட் படமான Tere Ishk Mein, ஏற்கனவே இவர் நடிப்பில் ரிலீஸ் ஆன, 'ராஜண்ணா' படத்தின் 2-ஆம் பாகம் என கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யவது போலவே தனுஷின் லுக்கும் அமைந்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. பகல் நேரங்களில் ஷூட்டிங் நடத்தினால் கூட்டம் கூடிவிடும் என்பதால், இரவு நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.