நடிகர் தனுஷ், முதன்முறையாக இயக்குநர் மணிரத்னத்துடன் ஒரு புதிய படத்திற்காக இணையவுள்ளார். அடுத்தடுத்த பிரம்மாண்ட கூட்டணிகளால் தனுஷின் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் உருவாவதாகக் கூறப்படும் மெகா கூட்டணி!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், தற்போது நடிப்பின் அசுரனாக வலம் வருகிறார். நடிப்பு மட்டுமன்றி இயக்கம், தயாரிப்பு எனப் பன்முகத்திறமை கொண்ட தனுஷ், அடுத்தடுத்து பல முக்கியப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு பிரம்மாண்ட தகவல் வெளியாகியுள்ளது.
26
மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ்
தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம், ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்குப் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கியவர். தற்போது மணிரத்னம் - தனுஷ் ஆகிய இருவரும் முதன்முறையாக ஒரு புதிய படத்திற்காக இணையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப்போகும் செய்தி வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
36
மற்றப் படங்கள் குறித்த விவரங்கள்
தனுஷ் தற்போது மிகவும் பிஸியான நடிகராகத் திகழ்கிறார். மணிரத்னம் படத்திற்கு முன்னதாக அவர் கைவசம் வைத்துள்ள மற்றப் படங்களை பார்ப்போம். போர்த்தொழில்' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் தனது 'கர' படத்தின் படப்பிடிப்பை அண்மையில் முடித்துள்ளார். 'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது அடுத்த படத்தை (D55) தனுஷை வைத்து இயக்குகிறார்.தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி இணையும் இந்தப் படத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா (பூஜை) சமீபத்தில் அனைத்து நட்சத்திரங்களும் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ச்சியாகத் திறமையான இயக்குநர்களுடன் தனுஷ் கூட்டணி அமைத்து வருவதால், அவரது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் உச்சத்தில் உள்ளது. மணிரத்னம் - தனுஷ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
56
மம்மூட்டி, சாய் பல்லவி கூட்டணி
நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் 2026-ஆம் ஆண்டு ஒரு மிகமுக்கியமான ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் போன்ற ஜாம்பவான்களுடன் முதன்முறையாக இணைவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் 'அமரன்' புகழ் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணையும் D55 படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.
66
வரிசையாக ரிலீசாகும் படங்கள்
நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் 2026-ஆம் ஆண்டு ஒரு மிகமுக்கியமான ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் போன்ற ஜாம்பவான்களுடன் முதன்முறையாக இணைவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் 'அமரன்' புகழ் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணையும் D55 படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.