விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கர. இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ள நிலையில், இதன் ரிலீஸ் தேதி இணையத்தில் கசிந்துள்ளது.
தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் 'கர'. 'போர் தொழில்' படத்திற்குப் பிறகு விக்னேஷ் ராஜா இயக்கும் படம் இது. பொங்கலையொட்டி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் கவனத்தை ஈர்த்தது. தனுஷ் நடிக்கும் 'கர' படத்தின் தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகான ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, 'கர' படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
24
கர ரிலீஸ் தேதி எப்போது?
கர திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 30ந் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு, தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்திலும் மமிதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் விஜய்யின் மகளாக மமிதா நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், சூர்யா 46-ல் சூர்யாவுக்கு ஜோடியாகவும் மமிதா நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்திலும் மமிதா கதாநாயகியாக நடித்திருந்தார்.
34
கர மூவி டீம்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் 'கர' படத்தை தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கர திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கரசாமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏப்ரல் மாதம் திரையரங்கிலும் மே மாதம் ஓடிடியிலும் கர திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'இட்லி கடை'. தனுஷ் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்த படம் இது. இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். 'திருச்சிற்றம்பலம்' என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப் பிறகு தனுஷ்-நித்யா மேனன் கூட்டணி இணைந்த படம் இது. தனுஷ் இயக்கத்தில் வெளியான நான்காவது படமாக 'இட்லி கடை'. ஷாலினி பாண்டே மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனும் தனுஷும் இணைந்து இப்படத்தை தயாரித்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.