Kara Twitter Review: 'கர' தனுஷை காப்பாற்றியதா? கை விட்டதா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

Published : Apr 30, 2026, 01:00 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள, 'கர' திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவை பார்க்கலாம்.

PREV
16
கர திரைப்படம்

தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், கோலிவுட், பாலிவுட், மற்றும் ஹாலிவுட் வரை சென்று திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் 'தனுஷ்'. இவர் நடித்து - இயக்கி கடைசியாக வெளியான 'இட்லி கடை', ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து இன்று ஏப்ரல் 30 ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் தான் 'கர'. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க, கே எஸ் ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

26
கரசாமி என்கிற ஒருவரின் கதை

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் tஹன்யாரித்துள்ள இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் எதிர்பாராத நேரத்தில் அசாதாரணமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால், அதிலிருந்து எப்படி வெளியே வருகிறான் என்பதே இந்த படத்தின் கதைக்களம். 1991ம் ஆண்டு எரிபொருள் பற்றாக்குறை காலத்தில், தன் வாழ்க்கைக்கும் பாவத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்ட கரசாமி என்கிற ஒருவரின் கதை தான் இது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

36
தனுஷ் நடிப்பு பாராட்டுக்குரியது

அதிக எதிர்பார்ப்போடு வெளியாகி உள்ள இந்த படம் குறித்து ட்விட்டரில் வெளியாகியுள்ள விமர்சனந்த்தை பார்ப்போம். படம் குறித்து பேசியுள்ள ரசிகர் ஒருவர் " முதல் பாதி அருமை – கதைக்களம் மெதுவாக சென்றாலும், உணர்வு பூர்வமாக உள்ளது. தனுஷ் நடிப்பு பாராட்டுக்குரியது. கருணாஸ் மற்றும் தனுஷ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. முதல் 15 நிமிடங்கள் நெருப்பாக உள்ளது, இடைவேளை உச்சம் தொடுகிறது. பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. அதே போல் கணம்மா பாடல் அருமை. ஜி.வி.பிரகாஷ் இசை, மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது என தெரிவித்துள்ளார்.

46
ரசிக்க வைக்கிறது

கர படத்தின் இடைவேளை அழுத்தமாக உள்ளது. எளிமையான காணோட்டத்தில் படத்தை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. படம் சம்பவங்களுக்கு ஏற்ப உருவாகும் மனநிலைகளையும், சூழ்நிலை ஏற்படுத்தும் டென்ஷனையும், நன்றாக கையாளும் விதம் ரசிக்க வைக்கிறது. தனுஷ் தன்னுடைய நடிப்பில் அசதி உள்ளார். ஜீவியின் இசை பாராட்டத்தக்கது. மீதமுள்ள கதையின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

56
மமிதா பைஜூ

மற்றொரு பதிவில், கர படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக உள்ளது. தனுஷ் சாமர்த்தியமான, துரித நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கே எஸ் ரவிக்குமார் எமோஷ்னல் நடிப்பு அருமை. கருணாஸ் எந்த ஒரு செயற்கை தனமும் இல்லாத காமெடி ரசிக்க வைக்கிறது. மமிதா பைஜூ குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிரிதிவிராஜ் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். என கூறியுள்ளார்.

66
இரண்டாம் பாதி

திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா போட்டுள்ள பதிவில், கர படத்தின் முதல் பாதி அபாரமாக உள்ளது. இது ஒரு எமோஷ்னல் திரில்லர். தனுஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கே எஸ் ரவிக்குமாரின் நடிப்பு பெஸ்ட். ஜிவி பிரகாஷ் குமார் சிறந்த இசையை வழங்கி உள்ளார். இரண்டாம் பாதி போலீஸின் சேசிங் காட்சிகள் இடம்பெறுவது மற்றொரு பரிமாணத்தை காட்டியுள்ளது. மொத்தத்தில் அருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories