Dhanush Speech at Kuberaa Audio Launch : தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் குபேரா 20ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
Dhanush Speech at Kuberaa Audio Launch : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். நடிகரையும் தாண்டி இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார்.
29
நாகர்ஜூனா - குபேரா இசை வெளியீட்டு விழா
தனுஷ் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வெளியானது. இவருடைய நடிப்பில் ராயன் படம் வெளியானது. இந்தப் படத்தின் கலவையான விமர்சனத்திற்கு பிறகு இப்போது குபேரா படம் உருவாகி இருக்கிறது.
39
சேகர் கம்முலா
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, சயாஜி ஷிண்டே ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் குபேரா. முழுக்க முழுக்க சோஷியல் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
49
ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட குபேரா
கிட்டத்தட்ட ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல்எல்பி அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. வரும் 20ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் எப்போதும் போன்று வேஷ்டி சட்டையில் தனுஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய தனுஷின் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
59
ஷ்டம் எல்லாருக்கும் வரும் போகும்
அதில் அவர் என்ன பேசியிருக்கிறார் என்று பார்க்கும் போது கஷ்டம் எல்லாருக்கும் வரும் போகும், அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப தான் வாழ்க்கை அமையும். யாரும் யாரைப் பற்றியும் வதந்தி பரப்ப கூடாது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னை பற்றி எந்தளவிற்கு வேண்டுமானாலும் வதந்திகள், எதிர்மறை கருத்துக்களை பரப்புங்க. ஆனால், இங்கு இருப்பவர்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டும் கிடையாது.
69
ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க முடியாது
அவர்கள் தான் என்னுடைய தோழர்கள். ஒரு 4 வதந்தியை பரப்பிவிட்டு என்னை காலி செய்து விடலாம் என்று கொஞ்சம் கூட கனவில் கூட நினைக்காதீர்கள். ஏனென்றால் அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவுமில்லை. ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க முடியாது.
79
ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்லாமல் நான் இருந்திருக்கிறேன்
ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்லாமல் நான் இருந்திருக்கிறேன். இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். எந்த நிலையாக இருந்தாலும் சரி சந்தோஷமாக நிம்மதியாக இருப்பேன். ஏனென்றால் சந்தோஷத்தை வெளியில் தேட முடியாது. வாழ்க்கையில் சந்தோஷமும், நிம்மதியும் தான் முக்கியம்.
89
எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும்
யாராக இருந்தாலும் எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும். உங்களுக்கு என்று இருப்பதை யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது. சந்தோஷமும் நிம்மதியும் உங்களிடம் தான் இருக்கு. அதனை வெளியில் தேடாதீங்க என்று கூறியிருக்கிறார். மேலும், வட சென்னை 2 குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி வரும் 2026 ஆம் ஆண்டு வட சென்னை 2 ஆம் பாகம் உருவாகும் என்று கூறியுள்ளார்.
99
யாத்ராவின் பள்ளி சான்றிதழ் வழங்கும் விழா
ஏற்கனவே மூத்த மகன் யாத்ராவின் பள்ளி சான்றிதழ் வழங்கும் விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கலந்து கொண்ட நிலையில் குபேரா இசை வெளியீட்டு விழாவிலும் தனுஷிற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.