பட்டு, வேட்டி சட்டையில் தனுஷ்... பூஜையுடன் தொடங்கியது #D44 பட ஷூட்டிங்...!

Published : Aug 05, 2021, 12:55 PM IST

#D44 படத்திற்காக செட் அமைக்கும் வேலைகள் ஈசிஆரில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

PREV
15
பட்டு, வேட்டி சட்டையில் தனுஷ்... பூஜையுடன் தொடங்கியது #D44 பட ஷூட்டிங்...!

இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.தற்போது கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளையும் தனுஷ் முடித்துவிட்டதாக  வெளியாகியுள்ள லேட்டஸ்ட் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கும் வர என அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

‘தி கிரேமேன்’ ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தனுஷ், அடுத்தடுத்து தான் கமிட்டாகியுள்ள தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய கையோடு முதல் வேலையாக  கார்த்திக் நரேன் இயக்கி வரும் #D43 பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். இதில் தனுஷூக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். 

25
Maran

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திற்கு மாறன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. இதில் நிருபராக தனுஷ் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் மாறன் பட ஷூட்டிங்கில் பங்கேற்ற தனுஷ், தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் #D44 பட ஷுட்டிங்கில் இன்று முதல் பங்கேற்றுள்ளார். 

35
Dhanush

மித்ரன் ஜவஹர் இயக்கி வரும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷ் எழுதியுள்ளார். மேலும் டி.என்.ஏ. என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தனுஷ் மற்றும் அனிருத் 6 ஆண்டுகளுக்குப் பிறகு #D44 படம் மூலமாக ஒன்றிணைந்துள்ளனர். 

45
Dhanush

இந்த படத்தில் இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. 3 ஹீரோயின் சப்ஜெக்ட் கொண்ட இந்த படத்தில் முதன் முறையாக தனுஷுடன் பிரபல நடிகைகளான ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளதையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று உறுதி செய்தது. 

55
Dhanush

#D44 படத்திற்காக செட் அமைக்கும் வேலைகள் ஈசிஆரில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. பட்டு வேட்டி, சட்டையில் தனுஷ், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories