தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர், செல்வராகவன். இவரது மனைவி கீதாஞ்சலி செம்ம கிராண்டாக தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய சகோதரர் தனுஷை வைத்து இயக்கி கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம், இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
இந்த படத்தை தொடர்ந்து, 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'இரண்டாம் உலகம்' போன்ற பல வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இவர் தன்னுடைய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து, கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின்னர், தன்னுடைய துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். தற்போது இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் தான் இவர்களுக்கு மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது. அவ்வபோது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, தனது கணவரை எடுத்த பேட்டி ஒன்றை வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் திருமணத்தின் போது மிகவும் குண்டாக இருந்த கீதாஞ்சலி, இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் மெல்ல மெல்ல உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறினார்.
அதே போல் அடிக்கடி விதவிதமான டிரஸ் அணிந்து புகைப்படம், மற்றும் வீடியோ வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளை இவர் குடும்பத்துடன் பார்ட்டி வைத்து கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த பார்ட்டியில், நடிகர் தனுஷும் கலந்து கொண்டு தன்னுடைய அண்ணியை வாழ்த்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை கீதாஞ்சலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.