‘அமெரிக்கா வந்த கேப்பில் சோலியை முடிச்சிட்டீங்க இல்ல’... ஒய்நாட் மீது செம்ம கடுப்பில் தனுஷ்!

First Published | Apr 28, 2021, 2:41 PM IST

நடிகர் தனுஷ் தி கிரேமேன் பட ஷூட்டிங்கிற்காக அமெரிக்காவில் தங்கி நடித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18ம் தேதி நெட்பிலிக்ஸில் வெளியாகும் என ஒய்நாட் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மாமனாரை வைத்து பேட்ட இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மருமகனை வைத்து என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார்.
பல மாதங்களாக படத்தின் அதிகாரப்பூர்வ தேதியை அறிக்கப்படாமல் இருந்த நிலையில், ஓடிடியில் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் #JagameThandhiram, #ShameOnUYNot ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தனர்.
Tap to resize

ரசிகர்களுக்கு ஆதரவாக நடிகர் தனுஷ் கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என் ரசிகர்களைப் போல் ‘ஜகமே தந்திரம்’ படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்” Finger Crossed என ட்வீட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த போதும், நெட் பிலிக்ஸ் நிறுவனத்துடன் ஒய் நாட் ஸ்டுடியோஸ் பேச்சுவார்த்தை தொடர்ந்து தனுஷ் ரசிகர்களை கடுப்பேற்றியது. இதனால் தனுஷுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் வெளியான டீசரில் கூட தனுஷ் பெயர் இடம் பெறாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் படத்தை ஓடிடியிலேயே வெளியிட்டாலும் புறக்கணிப்போம் என ஒய் நாட்டிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.
தற்போது நடிகர் தனுஷ் தி கிரேமேன் பட ஷூட்டிங்கிற்காக அமெரிக்காவில் தங்கி நடித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18ம் தேதி நெட்பிலிக்ஸில் வெளியாகும் என ஒய்நாட் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.
ஜகமே தந்திரம் OTT ரிலீஸ் விவகாரத்தால் கோபமடைந்த நடிகர் தனுஷ் ஒய்நாட் நிறுவனத்திற்கு அடுத்து நடிப்பதாக இருந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டாராம். இதனால் நிறுவனம் சிறு பட்ஜெட்டில் அடுத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது.இப்படத்தை லென்ஸ் பட இயக்குநர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Latest Videos

click me!