தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை

Published : Mar 02, 2026, 08:10 PM IST

Dhanush Kara Movie Release Date Tamil : தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர படத்தின் ரிலீஸ் தேதி இணையத்தில் கசிந்த நிலையில் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
தனுஷ் நடித்த கர படம் எப்போது ரிலீஸ்?

இட்லி கடை படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் தான் கர. போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் கர என்ற கதாபாத்தில் நடித்துள்ளார். அது என்ன கர என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி என்று வரிசையாக தமிழில் மொத்தம் 60 ஆண்டுகள் வரும். அப்படி வரும் 60 ஆண்டுகளில் 25ஆவது வருடம் தான் கர.

24
Kara movie 90s bank heist story plot

அதாவது கர என்பது 25ஆவது ஆண்டை குறிக்கிறது. அப்படி என்றால் கதை 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் நடந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது. கடைசி கர வருடம் வந்தது 2011-12ம் வருடம் வந்தது. அப்போது இருந்த சூழலை மையப்படுத்திய படமாக இந்தப் படம் இருக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இணையத்தில் கசிந்த நிலையில், இப்போது தனுஷ் உள்பட படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

34
Kara Movie Release Date

அதன்படி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி கர படம் திரைக்கு வர இருக்கிறது. தனுஷின் 54ஆவது படமாக உருவாகியிருக்கும் கர படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

44
கர படத்தின் 90ஸ் பேங்க் ஹீஸ்ட் கதைக்களம்

கடைசியாக வெளியான இட்லி கடை படம் பெரியளவில் ஹிட் கொடுக்காத நிலையில் தனுஷின் கர படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா, ரசிகர்களை ஏமாற்றிய இந்த சூழலில் அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீசாவது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் தயாரித்த தாய் கிழவி படம் வெளியானது. அதற்கும் முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியானது. வேறு எந்த பெரிய படமும் ரிலீசாகாத நிலையில் இப்போது அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories