Viswanath and Sons Movie Story Plot : வாரிசு படத்தில் வருவதைப் போல கார்ப்பரேட் கம்பெனியில் தொழிலதிபராக இருக்கும் சூர்யா அவரது கையில் இருக்கும் குழந்தை யார் உள்ளிட்ட ரகசியங்களுடன் வெளியான விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் பட ஃபர்ஸ்ட் லுக் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் சிங்கம் சூர்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவின் படம் இந்த வருடம் பிளாக்பஸ்டர் ஆக வெற்றி அடையப் போகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் வரவிருக்கும் 46வது படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ், ஜூலை 2026 இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: தயாரிப்பாளர்களான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் பகிர்ந்து கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட சூர்யா, வித்தியாசத்துடன் காதல், ஒரு நோக்கத்துடன் குடும்பம் - நாங்கள் ஜூலையில் வருகிறோம் என்று தலைப்பிட்டு பகிந்துள்ளார்.
24
திரைப்படத்தின் நட்சத்திரங்கள்:
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் நாக வம்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில், சூர்யாவின் இளைய காதலியாக மலையாள நடிகை மமிதா பைஜுவும் நடிக்கிறார். ராதிகா சரத்குமார் மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் கமலஹாசனின் ஆளவந்தான் படத்தில் நடித்த இந்தி நடிகை டாண்டனும் நடிக்க உள்ளார்.
34
வாரிசு பாணியில் வரும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்:
வாரிசில் வருவதைப் போல கார்ப்பரேட் கம்பெனியும் வாரிசுகளை வைத்து கம்பெனியை உருவாக்குவது போல அந்த படம் படமாக்கப்பட்டு இருக்கும் அதேபோல் சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யாவின் ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் நடுவில் நிற்கிறார். முழுக்க கண்ணாடிகள் நிறைந்த கம்ப்யூட்டர்களால் சூழ்ந்து காணப்படுகிறது. அதற்கு நடுவில் சூர்யா ஒரு கையில் சிறு குழந்தையுடனும், பால்ப்பாட்டல்ளுடன், சூர்யா ஒரு குடும்பத் தலைவன் பொறுப்பில் இருப்பதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது
44
யார் இந்த குழந்தை?
சூர்யாவின் கையில் இருக்கும் குழந்தை இந்த கதைக்கே ஒரு ட்விஸ்ட்டாக உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவின் கையில் இருக்கும் குழந்தை சூர்யாவின் மகன் இல்லை சூர்யாவின் தம்பி என்று சொல்லப்படுகிறது. குழந்தைதான் இந்த படத்தின் மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என டைட்டில் இருக்கும் நிலையில், தொழிலதிபர் விஸ்வநாத்தின் மூத்த மகன் தான் சூர்யா என்றும் இளைய மகன் தான் அந்த குழந்தை என்றும் இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள், சவால் நிறைந்து காணப்படும் சுவாரஸ்யம் தான் இந்த கதை என்று சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.