
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் இளையராஜாவின் பாடல்களை தான் இன்றும் நாம் எல்லோருமே கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே பட்டி தொட்டியெங்கும் இளையராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எல்லா உணர்ச்சிகளிலும் இளையராஜா ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். பிறப்பு முதல் இறப்பு, காதல், கோவம், அழுகை, என நவரசத்தையும் தன்னுடைய பாடலில் வெளிப்படுத்தும் தன்மை இசைஞானிக்கு உண்டு.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இளையராஜா தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் கூட ஏன் இளையராஜாவிற்கு இவ்வளவு திமிரு இருக்கிறது என்பது குறித்து விளக்கம் கொடுத்திருந்தார். அன்னக்கிளி படம் தான் இளையராஜா இசையமைத்த முதல் படம். படத்தில் கதை பெரிதாக இல்லையென்றாலும் கூட இளையராஜா தன்னுடைய பாடல் கொண்டு படத்தை ஹிட் செய்து கொடுத்துள்ளார். இவ்வளவு ஏன் அவரது பாடல்கள் பலரது காயங்களுக்கு மருந்தாக இருந்திருக்கிறது.
நைட் பார்ட்டியில் உச்ச கட்ட போதை; வெயிட்டருடன் அத்துமீறிய பால்கோவா நடிகை!
இந்த நிலையில் தான் தன்னுடைய பாடல்களை யாரும் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்றும், இல்லையென்றால் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று ஏற்கனவே கூறி இருந்தார். இளையராஜா அப்படி கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னணி பாடகரும் நடிகருமான எஸ்பிபிக்கே தன்னுடைய பாடலை மேடை நிகழ்ச்சிகளில் பாடக் கூடாது என்று கூறி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இவ்வளவு ஏன், தன்னுடைய மகனுக்கே காசுக்காக தான் காபி ரைட்ஸ் கொடுத்திருக்கிறார்.
இளையராஜாவிற்கு காசு தான் முக்கியம் என்பது போன்று அவரது செயல்பாடு இருக்கிறது என்று பலரும் பலவிதமான குற்றசாட்டுகள் முன்வைத்து பேசி உள்ளனர். சமீபத்தில் கூட தயாரிப்பாளர் கே ராஜன் இளையராஜாவை பண பைத்தியம் என விமர்சனம் செய்தார். ஒரு படத்திற்கு இசையமைக்க அல்லது பாடல் பாடுவதற்கு தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து சம்பளம் கொடுக்கப்பட்டுவிடும். அப்படி சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டால் அந்த தயாரிப்பு நிறுவனமே ஆடியோ ரைட்ஸீக்கு உரிமை கோர முடியும். அப்படியிருக்கும் போது பாடலின் காப்பி ரைட்ஸ் உரிமையை தயாரிப்பாளரிடமிருந்து இசையமைப்பாளர் வாங்கிவிட்டால் அந்த பாடலை பயன்படுத்துவோர் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படியில்லாமல் பயன்படுத்திவிட்டால் இசையமைப்பாளர் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும். இதைத் தான் இப்போது இளையராஜா செய்து வருகிறார்.
குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போட காதல் என்ற பாடலுக்கு உரிமை கொண்டவர் இளையராஜா. ஆனால், அவரது அனுமதி இல்லாமல் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் படக்குழுவினர் பயன்படுத்தவே அது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாக எங்கு பார்த்தாலும் இசையமைப்பாளர் தேவா தொடர்பான வீடியோக்கள் தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தேவா நான் காப்பி ரைட்ஸ் எல்லாம் கேட்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: காப்பி ரைட்ஸ் மூலமாக எனக்கு பேரும் புகழும் கிடைக்காது. பணம் மட்டுமே வரும். அப்படி வரும் பணம் எனக்கு தேவையில்லை. என்னுடைய பாடல்கள் இப்போது பல படங்களில் போடப்படுகிறது. இதன் மூலமான எனக்கு பேரும், புகழும் கிடைக்கிறது. இன்றைய தலைமுறையினரும் என்னைப் பற்றி பேசுகிறார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும். என்னுடைய பாடல்களை எல்லோருமே ரசிக்க வேண்டும். கோடி கோடியாக காசு, பணம் கொடுத்தாலும் எல்லோரும் ரசிப்பது கிடைக்காது என்று அவர் கூறியுள்ளார். இது நேரடியாகவே இளையாராஜாவை தாக்குவது போன்று தெரிகிறது. இளையராஜா என்றால் காப்பி ரைட்ஸ் கேட்கிறார். தேவா காப்பி ரைட்ஸ் வேண்டாம் என்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் தேவா, இளையராஜாவை தாக்கி பேசுவது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.